Saturday, March 27, 2010

SUN தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சர்ச்சைகள்....

அண்மையில் இந்தியாவின் பிரபல தமிழ் SUN தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சுவாமி நித்தியானந்தாவின் சர்ச்சைகள் தொடர்பான இடி முழக்கங்கள் ஓய்வதற்கு முன்பாக இன்னொரு சர்ச்சையை அதே தொலைக்காட்சி கிளப்பி உள்ளது.

சுவாமி நித்தியானதா தொடர்பாக கிளப்பப் பட்ட சர்ச்சைகள் இலங்கையில் எவரையும் பெரிதும் பாதிக்காத போதும் எல்லோருடைய கண்களின் இமைகளையும் உயர்த்த வைத்தது என்னவோ உண்மை தான்

ஆனால் இது இலங்கையில் சிலரது கண்களில் கண்ணீரை வரவழைத்துள்ளது.

இது பற்றி ஆராய முன் நான் உங்களுக்கு கூறிக் கொள்வது என்னவென்றால் நான் யாரையும் அக் காட்சிப்படுத்தலை பார்க்கத் தூண்டவில்லை. அத்துடன்  இந்த  விடயத்தை பிரசுரிப்பது தப்பில்லை என்று எண்ணுகிறேன் ஏனெனில் மிகவும் பிரபலமான அத்தொலைக்காட்சியில் ஒலிபரப்பப் பட்ட போது கூறிய விடயங்களை விட நான் கூறுவதில் தப்பிருக்காது .. 

நான் யாருடைய மனதையும் நோகடிக்க விரும்பவில்லை அத்துடன்
நான் யார் சார்பாகவும் பேசவும்  இல்லை
நாத்திகனும் இல்லை
எனக்குத் தெரிந்தவரையில் கூறுவது ............

அண்மையில் அந்த தொலைக்காட்சி வெளியிட்ட சுவாமி நித்தியானந்தாவின் சர்ச்சைக்கு முடிவு கட்ட முதல் அடுத்ததாக கல்கி பகவான் பற்றியும் அவர்களது ஆச்சிரமம் பற்றியும் அடுத்த சர்ச்சையைக்  கிளம்பி உள்ளது
அது தொடர்பான காட்சிப்படுத்தல்கள் மிக அண்மையில் அந்த தொலைக்காட்சியில் ஒளிபரப்பப் பட்ட போதும் பகவானை நம்புவோர்  பலர் அதை
பொய் என்றும்
கிராபிக்ஸ் என்றும்
தெய்வக் குற்றம் என்றும் கூறும் இந்த வேளையில்
பகவானை நம்பாதவர்கள் கேலி செய்யவும் காரணமாகிறது.

 ஒலிபரப்பப் பட்ட விடயம் என்னவென்று நான் இங்கு கூற விரும்பவில்லை காரணம் நானும் அதை ஒலிபரப்பப் போவதில்லை.

எனினும் சில விடயங்களை கூற விரும்புகின்றேன்

அதை பார்த்தவர்கள் இதையும் சிந்திக்க வேண்டும்ம்ம்ம்.....
இந்து சமயத்தை பொறுத்தவரை, நாயன்மார்கள், சித்தர்கள் பற்றி எல்லாம் கேள்விப்பட்டு இருப்பீர்கள்
இலங்கையில் வாழ்ந்த சில சித்தர்களை பற்றி படித்தது எனக்கு ஞாபகம் வருகிறது

பொதுவாக, அவர்களையும் மக்கள் அவர்கள் வாழும் காலங்களில் மிகவும் கேவலமாகத் தான் பார்த்தார்கள், மதிக்காது மண் கொட்டித் தூற்றினார்கள் அதை செய்ததும் இந்து சமய கொள்கைகளை பின்பற்றும் மக்கள் தான். பிற்காலங்களில்  தான் அவர்கள் உண்மையில் சித்தர்களை புரிந்து கொண்டார்கள் .

இவை அனைத்துக்கும் காரணம் அவர்களின் செயற்பாடுகள் மனநிலை பாதிக்கப் பட்டவர்கள் போலவும் மது போதைக் காரர்கள் போலவும் இருந்தது தான்

நல்லூர் அடியில் செல்லப்பா சுவாமிகள் பற்றி நீங்கள் கேள்விப்பட்டு இருப்பீர்கள்
பின் அவரது சீடர்கள் பற்றியும் நீங்கள் கேள்விப் பட்டு இருப்பீர்கள்
அவர் வாழும் போது எல்லோரும் விசர்ச் செல்லப்பா என்று தான் அழைத்ததும் உங்களுக்கு தெரியும்.
அப்படி இருக்க இக்காட்சி மட்டும் ஏன் வித்தியாசமாத் தெரிய வேண்டும்  ? 
இந்து சமயத்தை சேர்ந்தவர்கள் இதில் யோசிக்க வேண்டி உள்ளது சிரிப்பதற்கோ  கேலி செய்வதற்கோ இதில் எதுவும் இல்லை ..

இன்னொரு வகையில் நோக்குவோம்ம்ம்...
சற்று விதண்டாவாதமாக.....
நம் ஆட்கள்  ஏன் மதுக்கடையில் வரிசையில் நிற்கிறார்கள் ???????????
கேட்டால் அதன் மூலம் சொர்க்கத்தை காண முடியும் என்றுதான் சொல்கிறார்கள்
அப்படி சொர்க்கத்தை காணும் மதுக்கடை நண்பர்கள் செய்வது என்ன?
அவர்களது செயற்பாடு நீங்கள் நன்கு அவதானித்ததே.
ஆகவே இறைவனை காணும் இவர்கள் ஏன் அப்படி இருக்கக் கூடாது 
அந்த இடத்திலேயே மதுக்கடை ஆச்சிரம விவகாரம்  தோற்றுப் போகிறது... 

அடுத்தது என்ன 

அலசல் தொடரும்..!!!!

5 comments:

Anonymous said...

unkal karuthu enna
enakku antha tv la kaduppa irukku

Anonymous said...

கணா...உங்கள் கருத்துகள் மிகவும் மாறுபட்டவை உலகில் வாழ்ந்த எந்த சித்தர்களும் ஞானிகளும் பெண்களுடன் சல்லாபத்தில் ஈடுபட்டதில்லை...அவர்களுடைய பேச்சு,நடத்தை மட்டுமே மறுபட்டதாக இருக்கும்.சித்தர்கள் பெண்களால் உண்டான சுகத்தை ஒரு போதும் அனுமதித்ததில்லை....

கணா said...

sathushakthi அவர்களே,
உங்கள் குறிப்புரைக்கு நன்றி
நீங்கள் முனிவர்கள் கூட திருமணம் செய்து வாழ்ந்த விடயம் பற்றி அறிந்திருப்பீர்கள்
பிறகு என்ன ?
அதற்காக நான் எதையும் முழுவதுமாக சரி என்றும் சொல்லவில்லை
ஆனாலும் நான் மேலே கல்கி பகவான் பற்றி பெரிதாக கூறவில்லை
(கூற ஆரம்பிக்கவில்லை )
அவரது சீடர்கள் பற்றியே கூறியுள்ளேன்.
தொடரும் நாட்களில் மேலும் எதிர் பாருங்கள்.

கணா said...

இது Pirapthan Yogarajah அவர்களால் பிரசுரிக்கும் படி வேண்டப் பட்ட ஒன்று ,,,
""கணா!! நீங்கள் மறை முகமாக சொல்ல நினைப்பதை நான் நேரடியாகவே தெரிவித்து கொள்கிறேன் ... யார் இந்த கல்கி பகவான் தம்மை தாமே கடவுளர் என சொல்லிகொள்ளும் சாதாரண மனிதர்களே ... அத்துடன் சில மாஜ வித்தைகளையும் கற்றவர்கள் ... பாமரன் முதல் படித்தவன் வரை அனைவரினதும் மனதில் உள்ள தாழ்வுமனப்பான்மை மற்றும் பலவீனங்களை அறிந்து கொள்ளும் வித்தையை கற்றவர்கள் ... இவர்களுடைய போதனைபீடங்களுக்கு சென்று வந்தவர்களில் நானும் ஒருவன்... அவர்களால் கவரபட்டு அல்ல அங்கு என்ன தான் நடக்கின்றது அதையும் ஒருமுறை பார்த்துவிடுவோமே என்ற ஆவல் உடன் சென்றவன் ... அவர்களால் எவ்வாறு மக்களை தம்பக்கம் இழுக்க முடிகிறது என்ற வினாவிற்கு விடை மிகவும் சாதாரணமானது .. பெற்றோர்கள் பிள்ளைகள் இடத்தில காட்டும் அன்பினையும் பிள்ளைகள் பெற்றோர்கள் இடத்தில காட்டும் அன்பினையும் அவர்களுக்கு உள்ளே நடைபெறும் பிரைச்சனைகளையுமே இவர்கள் தமது வியாபாரத்தினை நடத்துவதற்கான பிரதான ஆயுதமாக கையில் எடுத்துள்ளனர் ... அதற்கமைய முதலில் மக்களை அணுகும் சந்தர்பத்தில் அவர் தெரிவிப்பது இது ஒன்று மட்டும் தான் தாய் தந்தையரே கடவுள் அவர்களை மனம் நோகடிப்பதன் பிள்ளைகள் எந்த ஒரு நல்லநிலையினையும் அடைந்துவிடமுடியாதென்றும் அதே போன்று பெற்றோர்களும் பிள்ளைகளிடத்தில் விட்டுகொடுப்புகளோடு நடந்துகொள்ள வேண்டும் என்று போதிக்கும் இவர்கள் ... காலபோக்கில் தாமே தாய் தந்தையர் உலகமக்கள் அனைவரும் தம்பிள்ளைகளே என்ற நிலைக்கு வந்து விடுகின்றனர் ... நான் நேரில் கண்ட , கேட்டவற்றை அதிலும் உதாரணதிற்கு இங்கு கூறிக்கொள்ள விரும்புகிறேன் .. நீங்கள் பரீட்சைகாக படிக்கவே தேவை இல்லை .. அம்மாபகவானை தரிசித்தாலே போதும் .. அவரே வந்து பரீட்சைமண்டபதில் உங்களுக்கான தேர்வினையும் எழுதி தேவையான புள்ளிகளையும் (உங்களுக்குள் புகுந்து) பெற்றுத்தருவர் .. என்று வேடிக்கையான வாக்குறுதிகளை அள்ளிவழங்குவர் ... இங்கு எதனையும் மிகை படுத்தி எழுத வேண்டிய அவசியம் எனக்கு இல்லை .. எனக்கு நடந்த உண்மையான அனுபவத்தினையே இங்கு குறிப்டுகின்றேன்... தொடரும்.... வினாக்கள் இருப்பின் அதற்கான பதில்களும் ..""

கணா said...

Pirapthan Yogarajah அவர்களே,
உங்கள் அனுபவத்தை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி
இது ஏனையவர்களுக்கும் பிரயோசனமாக இருக்கும் என நினைக்கிறேன்..

but
i said
"நான் யாருடைய மனதையும் நோகடிக்க விரும்பவில்லை அத்துடன்
நான் யார் சார்பாகவும் பேசவும் இல்லை
நாத்திகனும் இல்லை
எனக்குத் தெரிந்தவரையில் கூறுவது .........."