Monday, March 15, 2010

கடந்த சிவராத்திரி தினத்தன்று பேராதனைப் பல்கலைக்கழக குறிஞ்சிக் குமரன் ஆலயத்தில்..........

கடந்த சிவராத்திரி தினத்தன்று பேராதனைப் பல்கலைக்கழக குறிஞ்சிக் குமரன் ஆலயத்தில் இடம்பெற்ற விவாத அரங்கில் இன்றைய நிலைக்கு ஏற்ப இந்து சமயக் கொள்கைகள் மாற்றப்பட வேண்டுமா அல்லது இல்லையா என்ற தலைப்பில் இன்றைய உலக நிலைமை மற்றும் அதற்கு ஏற்ப இந்து சமயக் கொள்கைகளில் ஏற்படவேண்டிய மாற்றங்கள் பற்றி பல காரசாரமான விடயங்கள் பேசப்பட்டன.

இரு அணியினரும் தங்களால் இயலுமானவரை தரவுகளை சேகரித்து விவாத அரங்கில் முன் வைத்தனர் .

அதில் குறிப்பிடத்தக்க வரவேற்கக்கூடிய விடயங்கள் இருந்தபோதும் சில விடயங்கள் கசப்பனவையாகவும் சில பொய்யனவையாகவும் இருந்ததே உண்மை.

அது பற்றி தொடர்ந்தது வரும் நாட்களில் எழுத்தத் தீர்மானித்து உள்ளேன்.

சமயம் மற்று மதக் கொள்கைகள் என்று சில இருக்க அது பின்பற்றப்பட வேண்டிய காரணங்கள் இடத்துக்கு இடம் காலத்துக்கு காலம் வேறுபட்டவையாக வெளி வருவதே உண்மையாகும். காலத்துக்கு காலம் தோன்றும் அறிஞர்கள் வளர்ந்து வரும் இந்த விஞ்ஞான உலகில் தமது சமயம் அழிந்து விடக் கூடாது என்ற காரணத்துக்காக விஞ்ஞான ரீதியாக சமயக் கொள்கைகளை விளக்க முற்படுகின்றனர்.

அதன் போது தான் ஒவ்வொருவரதும் விளக்கம் மாறுபடுகிறது .

ஏன் சில நூற்றாண்டுகளுக்கு முன் ஞானிகள் மற்றும் சித்தர்கள் என்று சொல்லப் படுபவர்களும் இதைதான் செய்தார்கள் .

இன்றைய சமூகத்தில் உள்ள பிரச்சனை என்னவென்றால் விஞ்ஞான வளர்ச்சி

அதன் காரணமாக மனிதன் செய்யும் ஒவ்வொரையும் ஆராய முயல்கிறான்

சில கொள்கைகள் விளங்கப் படுகின்ற போது தப்பாக விளங்கிக் கொள்ளப் படுகின்றன

அதனால் தான் சில பிரச்சனைகள் உருவாகின்றன.



இன்றைய காலத்தில் இந்து சமய கொள்கைகளுக்கு விளக்கம் கொடுத்தவர் வரிசையில் கவிஞர் கண்ணதாசனும் அடங்குகிறார்

அவர் எழுதிய "அர்த்தமுள்ள இந்துமதம் " எனும் பிரசித்தி பெற்ற நூல் பற்றி நீங்கள் அறிந்ததே எனினும் அதை உங்கள் பார்வைக்காக இங்கே பாகம் பாகமாக தருகிறேன்

எனது குறிப்பும் தொடரும்........................
 

அர்த்தமுள்ள இந்துமதம் - பாகம் I

1. உறவு



‘மனிதன் சமூக வாழ்க்கையை மேற்கொண்டு விட்ட ஒரு மிருகம்’ என்றார் ஓர் ஆங்கில அறிஞர்



காட்டு மிராண்டிகளாகச் சிதறிக்கிடந்த மனிதர்கள் குடிபெயர்ந்து ஊர்ந்து வந்து ஓரிடத்தில் சேர்ந்தார்கள். அதனால் அவர்கள் சேர்ந்து வாழ்ந்த இடம் ‘ஊர்’ என்று அழைகப்படது.

அதில் பலர் நகர்ந்து வந்து பெருங்கூட்டமாக ஓரிடத்தில் குடியேறினார்கள். அவ்விடம் ‘நகரம்’ என்றழைக்கப்பட்டது.



தனி மனிதர்கள் ‘சமூக’மாகி விட்டார்கள்.



தனி மனிதனுக்கான நியதிகளோடு சமுதாயத்திற்காகச் சில சம்பிரதாயங்களும் உருவாயின.



அந்தச் சம்பிரதாயங்களுள் சில புனிதமாக்க் கருதப்பட்டு தருமங்களாயின.



கணவன் - மனைவி உறவு, தாய்-தந்தை பிள்ளைகள் உறவு, தயாதிகள்- பங்காளிகள் உறவு, ஊர்ப்பொது நலத்துக்கான கூட்டுறவு முதலியவைகள் தோன்றின.



தந்தைவழித் தோன்றல்களெல்லாம் ‘பங்காளி’ களாவும், தந்தையுடன் பிறந்த சகோதரிகளெல்லாம் ‘தாயாதி’ களாகவும் ஒரு மரபு உருவாயிற்று.



வார்த்தைகளை கவனியுங்கள்.



தந்தைவழி பங்குடையவன் என்பதாலே ‘பங்காளிய யாகவும், தாயை ஆதியாக வைத்து விளைந்த சகோதரத்துவம் ‘தாயாதி’ என்றும் கூறப்பட்டது.



‘சகோதரன்’ என்ற வார்த்தையே ‘சக உதரன்- ஒரே வயிற்றில் பிறந்தவன்’ என்பதைக் குறிக்கும்.



சம்பிரதாயங்களாகத் தோன்றிய உறவுகள் மரபுகளாகி, அந்த மரபுகள் எழுதாத சட்டங்களாகிவிட்டன.



இந்த உறவுகளுக்குள்ளும், பொதுதவாகச் சமூகத்திலும் நிலவ வேண்டிய ஒழுக்கங்கள் சம்பிரதாயங்களாகி, மரபுகளாகி, அஐயும் சட்டங்களாகி விடன.

இந்தச் சட்டங்களே நமது சமூகத்தின் கௌரவங்கள்: இந்த வேலிகள் நம்மைக் காவல் செய்கின்றன.



இந்த உறவுகள், ஒழுக்கங்களுக்கும் நம்மதிக்குமாக உருவாக்கப்பட்டவை.

ஆனால் இவை மட்டும்தானா உறவுகள்?



இந்து மதம் அதற்கொரு விளக்கம் சொல்கிறது.



“பிறப்பால் தொடரும் உறவுகளல்லாமல், பிணைப்பால் தொடரும் உறவுகளே உன்னதமானவை என்பது இந்துமத்த்தத்துவம்



பிறப்பின் உறவுகளே பேதலிக்கின்றன.



பெற தந்தையைப் பிச்சைகு அலையவிடும் மகன் இருக்கின்றான்.

கட்டிய தாரத்தையும் பட்டின் போடும் கணவன் இருக்கின்றான்.



தாயைத் தவிக்கவிட்டுத் தாரத்தின் பிடியில் லயித்துக் கடக்கும் பிள்ளை இருக்கிறான்.



கூடப் பிறந்தவனே கோர்ட்டுப் படிக்கட்டுகளில் ஏறி எதிராக நிற்கிறான்.



சமூக மரபுகள் இவற்றை ஒழுக்க் கேடாக்க் கருதவில்லை.



முதலில் நமது சமூகங்களுக்கு, ‘இவையும் ஒழுக்க் கேடுகள்’ என்று போதித்தது இந்து மதம்.



கணிகை ஒருத்தியைக் கட்டிலில் போட்டு இரவு முழுவதும் விளையாடுகிறோம். இச்சை தீர்ந்ததும், அவளைத் தள்ளில் படு என்றுதான் சொல்லத் தோன்றுகிறதே தவிர, அங்கு நீக்கமுடியாத பிணைப்பு ஏற்படுவதில்லை.



அந்த உறவு இரவுக்கு மட்டுமே!



அலுவலகத்தில் வேலை பார்க்கிறோம். வேலையிலிருந்து விலகியதும், வேலை பார்த்த இடத்தை மறந்து விடுகிறோம். அந்தப் பிணைப்பு கூலிக்காகவே!



ஹோடலில் அறை எடுத்துக்கொண்டு தங்குவதுபோல் சில உறவுகள்,சொந்த வீட்டில் வாழ்வதுபோல் சில உறவுகள்.



ஆயிரம் வாசல் இதயம்! யாரோ வருகிறார்கள், யாரோ போகிறார்கள்!



வாழ்ந்தால் சிரிக்கிறாரகள். வறண்டால் ஒதுங்குகிறார்கள். செத்தப்பின் ஒப்புக்காக அழுகிறார்கள்.



இர்ண்டு ஆத்மாக்கள் ஐக்கியமாகி, ஓர்ஆத்மா தாக்கப்படும்போது இன்னொரு ஆத்மாவும் இயற்கையாகத் துடிக்குமானால், அந்த உறவே புனிதமான உறவு.



பிறப்பில் சொந்தமிருந்தாலும் சரி, இல்லா விட்டாலும் சரி.



எங்கே பந்தம் ஏற்றத்தாழ்வுகளில் சேர்ந்து வருகிறதோ, அங்கேதான் உறவிருக்கிறது.



கண்ணீரைத் துடைக்கின்ற கைகள், காயத்துக்கும் கடுப் போடம் கைகள், வறுமையில் பங்கு கொள்ளும் உள்ளம, சோதனையில் கூடவே வரும் நட்பு - உறவு பூர்த்தியாகிவிடுகிறது.



“அற்ற களத்தி ன்றநீர்ப்பறவைபோல்

உற்றழித் தீர்வா ருறவல்லர் - அக்குளத்திற்

கொட்டியு மாம்பலும் நெய்தலும் போலவே

ஒட்டி யுறுவா ருறவு!” -ஔவையார்



இதற்குப் புராணத்திலிருந்து ஒரு பகுதியை உதாரணம் காட்டி விரிவுரை தருகிறார், திருமுருக கிருபானந்த வாரியார்.



அதை அவருடைய வாசகத்திலேயே தருகிறேன்.



‘இடர் வந்த காலத்தில்தான் சிநேகிதர, பந்துக்கள் முதலியவர்களுடைய அன்பைத் திட்டமாக அளந்தறியலாம். நமக்கு வரும் இடர்தான்,சிநேகிதரையும் உறவின் முறையினரையும் அளகும் அளவுகோல். ஆதலால் அக்கேட்டிலும் ஒரு பலன் உளது என்றார் பொய்யில் புலவர்.



கேட்டினும் உண்டோர் உறுதி; கிளைஞரை

நீட்டி அளப்பதோர் கோல்.



இது சம்பந்தமாக, தரும்புத்திர்ர் வினவி, பீஷ்மர் கூறிய வியாக்கியானத்தை எடுத்துக் காட்டுவோம்.



காசிராஜனுடைய தேசத்தில் ஒரு வேடன், வடமுள்ள பாணத்தை எடுத்துக்கொண்டு, சேரியிலிருந்து புறப்படுட் மானைத்தேடிப்போனான். அங்கு ஒருபெரிய வனதில் மான்கள் அருகிலிருக்கக் கண்டு மாமிசத்தில் இச்சையுடைய அந்த வேடன்,ரு மானையடிக்கக் குறிவைத்துக் கூரிய பாணத்தை விடதாதன். தடுக்கமுடியாத அந்தப் பாணம் குறி தவறினதால், அக்கானகத்திலுள்ள ஒரு பெரிய தழைத்த மரத்தின்மீதுபாய்ந்தது. கொடுயி விடந்தடவய கணையினால் மிக்க வேகத்துடன் குத்தப்பட்ட அம்மரம், காய்களும் இலைகளும் உதிர்ந்து உலர்ந்து போயிற்று. வானளாவி வளர்ந்தோங்கிநயிருந்த அத்தருவானது அவ்வாறு உலர்ந்தபோது, அதன் பொந்துகளில் வெகுநாள்களாக வசித்திருந்த ஒரு கிளி, அம்மரத்தின் மேல்லுள்ள பற்றினால் தன்னிருப்பிடதை விடவில்லை. நன்றியறிவுளதும் தருமத்தில் மனமுள்ளதுமாகிய அந்தக் கிளி வெளியிற் சஞ்சரியாமலும், இரையெடாமலும், களைப்புற்றும் குரல் தழுதழுத்தும், மரத்துடன் கூடவே உளர்ந்தது. மரஞ்செழிப்புற்றிருந்து போது அதனிடஞ் சுகித்திருந்தது போல், அது உலர்ந்து துன்றபுறும்போது அதனை விட்டுப் பிரியாமல், தானுந்துன்புற்றிருந்தது. அந்தக் கிளியின் உயர்ந்த குணத்தை நன்கு நோக்குங்கள்.



சிறந்த குணமுள்ளதும், மேலான சுபாவமுள்ளதும் மனிதர்க்கு மேற்பட்ட நல்லொழுகமுடையதுமான அக்கிளி, அமர்ரத்தைப் போலவே சுகத்தையும் துக்கத்தையும் அனுபவித்துக் கொண்டிருப்பதைக் கண்ட தேவேந்திரன் திகைப்படைந்தான். ‘திரிய் ஜாதிகளுக்கு இல்லாத கருணையை இந்தப பட்சி அடைந்திருப்பது எவ்வகை?’ என்று நினைத்தான்: பிறகு, ‘இதில் ஆச்சர்யப்படவேண்டியதில்லை. எல்லாப் பிராணிகளிலும் குணம், குற்றம் எல்லாம் காணப்படுகின்றன. என்று எண்ணமும் இந்திரனுக்கு உண்டாயிற்று.



இங்ஙனமெண்ணிய இந்திரன், மானிட உருவெடுத்து ஓர் அந்தணன் வடிவமாகப்பூமியில் இறங்கி அந்தப் பட்சியைப் பார்த்து, ‘ஓ பட்ணசிகளிற் சிறந்த கிளியே; உன்தாயாகிய தாக்ஷேயி உன்னால் நல்ல சந்ததியுள்ள வளாக ஆகிறாள். கிளியாகிய உன்னை நான் கேட்கிறேன் உலர்ந்து போன இந்த மரத்தை ஏன் விடாமலிருக்கிறாய்?” என்று கேட்டான்.



இமையவர் தலைவனாம் இந்திரானால் இவ்வாறு கேட்கப்பட்ட கிளியானது அவனுக்குத்தலைவணங்கி நமாகாரம் புரிந்து, “தேவராஜாவே, உனக்கு நல்வரவு. நான் தவத்தினால் உன்னைத் தெரிந்துகொண்டேன். என்று சொல்லிற்று. தேவேந்திரன் “நன்று! நன்று!” என்று கூறி, ‘என்ன அறவு’ என்று மனத்திற்குள் கொண்டாடினான்.



“அறிவிற் சிறந்த பறவையே! இலைகளும் காய்களும் இன்றி உலர்ந்து, பறவைகளுக்கு ஆதரவற இம்மரத்தை ஏன் காக்கிறாய்? இது பெரிய வனமாயிருக்கிறதே! இலைகளினால் மூடப்பட்ட பொந்துகளும் சஞ்சரிக்கப்ப போதுமான இடமுள்ள இன்னும் அழகான மரங்கள் அநேகம் இப்பெரிய வனத்திலிருக்கையில் முதிர்ச்சியடைந்து, சக்தியற்று, இரசம் வற்றி ஒளி குன்றிக் கெட்டுப்போன இந்நிலையற்ற மரத்தைப் புத்தியினால் ஆராய்ந்து பார்த்துவிட்டு விடு.”



அமரேசனுடைய இந்த வார்த்தையைக்கேட்டு தம்மவாத்மாவான அந்தக் கிளி, மிகவும் நீண்ட பெருமூச்செறிந்து துயரத்துடன் பின்வருமாறு சொல்லத் தொடங்கிற்று:



“மகாபதியே! இந்திராணியின் கணவனே! யாவராலும் வெல்ல முடியாத தேவர்களிருக்கும் பொன்னுலகத்தில் வசிக்கும் நீ, நான் கூறுவதைத் தெரிந்உகொள். அநேக நற்குணங்கள்பொருந்திய இம்மரத்தில் நான் பிறந்தேன். இளமைப் பருவத்தில்நன்றாகப் பாதுகாக்கப்பட்டேன். பகைவர்களாலும் பீடிக்கப்டாமலிருந்தேன். மழை,காற்றி, பனி,வெயில் முதலிய துன்பங்களால் வருந்தாது, இத்தருவில் சகித்திருந்தேன்.



வலாரியே! தயையும் பக்தியுமுள்ளவனாக வேறு இடம் செல்லாமலிருக்கும் என் விடயத்தில் அனுக்கிரகம் வைத்து என் பிறவியை ஏன் பயன்படாமற் செய்கின்றாய்? நான், அன்பும் பக்தியுமுள்ளவன். பாவத்தைப் புரியேன். உப காரியங்கள் விடயத்தில் தயை செய்வதே நல்லோர்களுக்கு எப்போதும் மனத்திருப்தியை உண்டாக்குகிறது. எல்லாத் தேர்களும் தருமத்திலுள்ள சந்தேகங்களை உன்னிடத்திலேயே கேட்கின்றனர். அதனாலேயே,நீ தேவசிரேட்டர்ளுக்கு அதிபதியாப் பட்டாபிஷேகம் செய்யப்பட்டிருக்கிறாய். இந்திரனே! வெகு காலமாக இருந் மரத்தை நான் விடும்படி நீ சொல்வது தகாது. நல்ல நிலைமையிலிருந்ததை அடுத்துப்பிழைத்தவன், கெட்ட நிலைமைக்கு வந்தவுடன், அதை எப்படி விடலாம்?”



எக்காலமு மிப்பாதப மெனதாமென வைகி

முக்காலே முதிருங்கனி முசியாது நுகர்ந்தேன்

இகாலமி தற்கிவ்வண மிடையோறு கலந்தாற்

சுக்காகல் வதுவோவுணர் வுடையோர்மதி தூய்மையே!



- மகாபாரதம்



இவ்வாறு கூறிய, பொருளடங்கியதும், அழுகுடையதுமாகிய கிளியினது வசனங்களால் மகிழ்உள்ள இந்திரன், அதன் நன்றியறிவையும் தயையையும் எண்ணித் திருப்தியுற்று, தரும்ம் தெரிந்த அக்கிளயைப் பார்த்து, மொரு வரம் கேள்!” என்றுசொன்னான்.



அன்பர்காள்! அகிளியானது தன் நன்மையைக் குறித்து வரம் கேட்கவில்லை. அதனுடைய பெருங்குணத்தை உற்று நோக்குங்கள்!



எப்போதும், பிறர் நோவாமையைப் பெரிதாக்க் கருதிய அந்தக் கிளி, “ஏ தேவர் கோமானே! இம்மரமானது நன்றாகச் செழித்துத் தலைத்து ஓங்க வேண்டும்!” என்றது.



அப்பறவையினுடைய உறுதியான பக்தியையும் நிரம்பின நல்லொழுக்கத்தையும் அறிந்து களிப்புற்று இந்திரன் உடனே அம்மரத்தின் மீது அமிர்தம் பொழிந்தான். அதனால் அத்தரு, கனிகளும், இலைகளும், கிளைகளும் உண்டாக்கித்தழைத்து.



கிளியினுடைய உறுதியான பக்தியால், அம்மரம் முன்னைக் காட்டிலும் மிகவும் நன்றாகச்செழித்தது.



நன்இயறிவு, தயை இந்தக்குணங்களின்பயனாகிய அச்செய்கையினால் கிளியும் அத்தருவில் இனிது மகிழ்ந்திருந்தது. தன் ஆயுள் முடிந்த பிறகு இந்திர லோகத்தையடைந்தது.



2. ஆசை



வாழ்க்கை எதிலே ஓடிக்கொண்டிருக்கிறது?



ஆசையிலும் நம்பிக்கயிலுமே ஓடிக்கொண்டிருக்கிறது.



சராசரி மனிதனை ஆசைதான் இழுத்துச் செல்கிறது.



அன் துக்கெல்லாம் அதுவே காரணமாகிறது. ‘வேண்டும்ய என்றகிற உள்ளம் விரிவடைந்து கொண்டே போகிறது. ‘போதும்’ என்ற மனம் சாகும்வரை வருவதில்லை.



ஐம்பது காசு நாணயம் பூமியில் கிடந்து, ஒருவன் கைக்கு அது கிடைத்துவிட்டால், வழியெடுக நாணயம் கிடைக்கும் என்று தேடிக்கொண்டே போகிறான்.



ஒரு விஷயம் கைக்குக் கிடைத்துவிட்டால் நூறு விஷயங்களை மனது வளர்த்துக்கொள்கிறது.



ஆசை எந்தக் கட்டத்தில் நின்றுவிடுகிறதோ, அந்தக் கட்டத்தில் சுயதரிசன் ஆரம்பமாகிறது.



சுயதரிசன் பூர்த்தியானவுடன், ஆண்டவன் தரிசன் கண்ணுக்கு தெரிகிறது



ஆனால் எல்லோராலும் அது முடிகிறதா?



லட்சத்தில் ஒருவருக்கே ஆசையை அடக்கும் அல்லது ஒழிக்கும் மனப்பக்குவம் இருக்கிறது.



என் ஆசை எப்படி வளர்ந்ததன்று எனக்கே நன்றாகத் தெரிகிறது.



சிறுவயதில் வேலையின்றி அலைந்தபோது “மாதம் இருபது ரூபாயாவது கிடைக்கக்கூடிய வேலை கிடைக்காதா” என்று ஏங்கினேன்.



கொஞ்ச நாளில் கிடைத்தது.

மாதம் இருப்பத்தைய்து ரூபாய் சம்பளத்திலே ஒருபத்திரிகையில் வேலை கிடைத்தது.



ஆறு மாதம்தான் அந்த நிம்மதி.



“மாதம் ஐம்பது ரூபாய் கிடைக்காதா?” என்று மனம் ஏங்கிற்று.



அதுவும் கிடைத்தது. வேறொரு பத்திரகையில் பிறகு மாதம் நூறு ரூபாயை மனது அவாவிற்று.



அதுவும் கிடைத்தது. மனது ஐநூறுக்குத் தாவிற்று.



அது ஆயிரமாக வளர்ந்தது.



ஈராயிரமாகப் பெருகிற்று.

யாவும் கிடைத்தன.



இப்பொழுது நோட்டடிக்கும் உருமையையே மனது கேட்கும் போலிருக்கிறது!



எந்க கட்டத்திலும் ஆசை பூர்த்தியடையவில்லை.



‘இவ்வளவு போதும்’ என்று எண்ணுகின்ற நெஞ்சு, ‘அவ்வளவு’ கிடைத்ததும், அடுத்த கட்டத்திற்குத் தாண்டுகிறதே, ஏன்?



அதுதான் இறைவன் லீலை!



ஆசைகள் அற்ற இடத்தில், குற்றங்கள் அற்றுப் போகின்றன.



குற்றங்களும், பாபங்களும் அற்றுப்போய்விட்டால் மனிதனுக்க அனுபவங்கள் இல்லாமற் போய் விடுகின்றன.



அனுபவங்கள் இல்லையென்றால், நன்மை தீமைகளைக்கண்டுபிடிக்க முடியாது.

ஆகவே தவறுகளின் மூலமே மனிதன் உண்மையை உணர்ந்து கொள்ள வேண்டும் என்பதற்கா, இறைவன் ஆசையைத் தூண்டிவிடுகிறான்.



ஆசையை மூன்றுவிதமாப் பிரிக்கிறது இந்து மதம்.



மண்ணாசை!

பொன்னாசை!

பெண்ணாசை!



மண்ணாசை வளர்ந்துவிட்டால், கொலை விழுகிறது.



பொன்னாசை வளர்ந்துவிட்டால், களவு நடக்கிறது.



பெண்ணாசை வளர்ந்துவிட்டால், பாபம் நிகழ்கிறது.



இந்த மூன்றில் ஓர் ஆசைகூட இல்லாத மனிதர்கள் மிகவும் குறைவு.



ஆகவேதான்,பற்றற்ற வாழ்க்கையை இந்து மதம் போதித்தது.



பற்ற்ற்று வாழ்வதென்றால், எல்லாவற்றையும் விட்டு விட்டு ஓடிப்போய் சந்நியாசி ஆவதல்ல!



“இருபது போதும்; வருவது வரட்டும்: போவது போகட்டும்: மிஞ்சுவது மிஞ்சட்டும்” என்று சலனங்களுக்கு ஆட்படாமலிருப்பதே பற்றற்ற வாழ்க்கையாகும்.



ஆசை, தீமைக்கு அடிப்படையாக இல்லாதவரை, அந்த ஆசை வாழ்வில் இருக்கலாம் என்கிறது இந்து மதம்.



நான் சிறைச்சாலையில் இருந்தபோது கவனித்தேன்.



அங்கே இருந்த குற்றவாளிகளில் பெரும்பாலோர் ஆசைக் குற்றாளிகளே.



மூன்று ஆசைகளில் ஒன்று அவனைக் குற்றவாளியாக்கியிருக்கிறது.



சிறைச்சாலையில் இருந்து கொண்டு, அவன் “முருகா, முருகா!” என்று கதறுகிறான்.



ஆம், அவன் அனுபவம் அவனுக்கு உண்மையை உணர்த்துகிறது.



அதனால்தான் “பரம்பொருள் மீது பற்று வை: நிலையற்ற பொருள்களின் மீது ஆசை வராது” என்கிறது இந்துமதம்.



“பற்றுக பற்ற்ற்றான் பற்றினை அப்பறைப்

பற்றுக பற்று விடற்கு” - என்பது திருக்குறள்.



ஆசைகளை அறவே ஒழிக்கவேண்டியதில்லை.

அப்படி ஒழித்துவிட்டால் வாழ்க்கையில் என்ன சுகம்?



அதனால்தான் ‘தாமரை இலைத் தண்ணீர் போல்ய என்று போதித்தது இந்து மதம்.



நேரிய வழியில் ஆசைகள் வளரலாம்.



ஆனால் அதில் லாபமும் குறைவு. பாபமும் குறைவு.

ஆயிரம் ரூபாய் கிடைக்கும் என்று எதிர்பார்த்து ஐநூறு ரூபாய் மட்டுமே கிடைத்தால், நிம்மதி வந்து விடுகிறது.



எதிர்பார்ப்பதைக் குறைத்துக்கொள்: வருவது மனதை நிறைய வைக்கிறது” என்பதே இந்துக்கள் த்த்துவம்.



எவ்வளவு அழகான மனைவியைப் பெற்றவனும், இன்னொரு பெண்ணை ஆசையோடு பார்க்கிறானே, ஏன்?



லட்சக்கணக்கான ரூபாய் சொத்துக்களைப் பெற்றவன்மேலும் ஓர் ஆயிரம் ரூபாய் கிடைக்கிற தென்றால் ஓடுகிறானே,ஏன்?



அது ஆசை போட்ட சாலை.



அவன் பயணம் அவன் கையிலில்லை; ஆசையின் கையிலிருக்கிறது.



போகின்ற வேகத்தில் அடி விழுந்தால் நின்று யோசிக்கிறான்ந அப்போது அவனுக்கு தெய்வஞாபகம் வருகிறது.



அனுபவங்கள் இல்லாமல, அறிவின்மூலமே, தெய்வத்தைக் கண்டு கொள்ளும்படி போதிப்பதுதான் இந்து மத்த்தத்துவம்.



‘பொறாமை, கோபம்’ எல்லேமே ஆசை பெற்றெடுத்த குழந்தைகள்தான்.



வாழ்க்கைத் துயரங்களுக்கெல்லாம் மூலகாரணம் எதுவென்று தேடிப் பார்த்து, அந்தத் துயரங்களிலிருந்து உன்னை விடுபடச் செய்ய, அந்தக் காரணங்களைச் சுட்டிக் காட்டி, உனது பயணத்தை ஒழுங்குபடுதும் வேலையை, இந்து மதம் மேற்கொண்டிருக்கிறது.



இந்து மதம் என்றும் சந்நியாசிகளின் பாத்திரமல்ல.



அது வாழ விரும்புகிறவர்கள், வாழ வேண்டியவர்களுக்கு வழிகாட்டி.



வள்ளுவர் சொல்லும் வாழ்க்கை நீதிகளைப் போல இந்து மதமும் நீதிகளையே போதிக்கிறது.



அந்த நீதிகள் உன்னை வாழவைப்பதற்கேயல்லாமல் தன்னை வளர்த்து கொள்வதற்காக அல்ல.



உலகத்தில் எங்கும் நிர்பந்தமாக, வெண்மையாக, தூய்மையாக, இருக்கிறது என்றதற்கு அடையாளமாகவே அது ‘திருநீறு’ பூச்ச் சொல்லுகிறது.



உன் உடம்பு, நோய் நொடியின்றி ரத்தம் சுத்தமா இருக்கிறது என்பதற்காகவே, ‘குங்கும்ம்’ வைக்கச் சொல்கிறது.



‘இவள் திருமணமானவள்’ என்று கண்டுகொண்டு அவளை நீ ஆசையோடு பார்க்காமலிருக்கப் பெண்ணுக்கு அது ‘மாங்கல்யம்’ சூட்டுகிறது.



தன் கண்களால் ஆடவனுடைய ஆசையை ஒருபெண் கிளறிவிடக்கூடாது என்பதற்காகவே, அவளைத் ‘தலைகுனிந்து’ நடக்கச் சொல்கிறது.



யாராவது ஆடவன்தன்னை உறு நோகுகிறான் என்பதைக் கண்டால், இந்தப் பெண்கள் மார்பகத்து ஆடையை இழுத்து மீட்க்கொள்கிறார்களே, ஏன்?



ஏற்கனவே திருத்தமாக உள்ள ஆடையை மேலும் திருத்துகிறார்களே, ஏன்ழ



எந்தவொரு ‘கவர்ச்சி’யும் ஆடவனுடைய ஆசையைத் தூண்டிஇடக்கூடாது என்பதால்.

ஆம்; ஆடவன் மனது சலனங்களுக்கும், சபலங்களுக்கும் ஆட்பட்டது.

கோவிலிலே தெய்வ தரிசன்ம் செய்யும்போது கூட கண் கோதையர்பால் சாய்கிறது.



அதை மீட்க முடியாத பலவீன்னுக்கு, அவள் சிரித்துவிட்டால் எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றியதுபோல் ஆகிறது.



“பொம்பளை சிரிச்சா போச்சு; புகையிலை விரிச்சாப் போச்சு” என்பது இந்துக்கள் பழமொழி.



கூடுமானவரை மனிதனைக் குற்றங்களிலிருந்து மீட்பதற்கு, தார்மீக வேலி போட்டு வளைக்கிறது இந்துமதம்.



அந்தக் குற்றங்களிலிருந்து விடுபட்டவனுக்கே நிம்மதி கிடைக்கிறது.



அந்த நிம்மதியை உனக்கு அளிக்கவே இந்துமதத் தத்துவங்கள் தோன்றின.



இன்றைய இளைஞனுக்கு ஷேக்பியரைத் தெரியும்; ஷெல்லியைத்தெரியும்; ஜேம்ஸ்பாண்ட் தெரியும். கெட்டுப்போன பின்புதான் அவனுக்குப் பட்டினத்தாரைப் புரியும்.

ஓய்ந்த நேரத்திலாவது அவன் ராமகிருஷ்ண மரமஹம்சரின் உபதேசங்களைப் படிப்பானானால், இநுத் மதம் என்பது வெறும் ‘சாமியார் மடம் ‘ என்ற எண்ணம் விலகிவிடும்.



நியாயமான நிம்மதியான வாழ்க்கையை நீ மேற்கொள, உன் தாய் விடிவில் துணை வருவது இந்துமதம்.

ஆசைகளைப்பற்இ பரமஹம்சர் என்ன கூறுகிறார்?



“ஆழமுள்ள கிணற்றின் விளிம்பில் நிற்பவன், அதனுள் விழுந்துவிடாமல் எப்போதும் ஜாக்கிரதையாக இருப்பதைப்போல் உலக வாழ்க்கையை மேற்கொண்டவன் ஆசாபாசங்களிஙல் அமிழ்ந்து விடாமல் இருக்க வேண்டும்” என்கிறார்.



“அவிழ்த்து விடப்பட்ட யானை, மரங்களையும் செடிகொடிகளையும் வேரோடு பிடுங்கிப் போடுகிறது. ஆனால் அதன் பாகன் அங்குசத்தால் அதன் தலையில் குத்தியதும், அது சாந்தமாகி விடுகிறது.



அது போல, அடக்கியாளாத மனம் வீண் எண்ணங்களில் ஓடுகிறது”



“விவேகம் என்ற அங்குசத்தால் அது வீழ்த்தப்பட்டதும் சாந்தமாகி விடுகிறது”. என்றார்.



அடக்கியாள்வதன் பெயரே வைராக்யம்.

நீ சுத்த வைராக்கியனாக இரு. ஆசை வளராது.



உன்னைக் குற்றவாளியாக்காது, உன் நிம்மதியைக் கெடுக்காது.



3. துன்பம் ஒரு சோதனை



வெள்ளம் பெருகும் ந்திகளும் ஒருமுறை வறண்டு விடுகிறது.



குளங்கள் கோடையில் வற்றி மழைக்காலத்தில் நிரம்புகின்றன.

நிலங்கள் வறண்ட பின்தான் பசுமை யடைகின்றன.



மரங்கள் இலையுதிர்ந்து பின் தளிர் விடுகின்றன.



இறைவனின் நியதியில் நிரந்தரமாக வாழ்ந்து கொண்டிருப்பது மலை ஒன்றுதான்.



அதுவும் வளர்வதாகவும், அமிழ்வதாகவும் விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.



இறைவன் மனிதனையும் அப்படித்தான் வைக்கிறான்.



நிரந்தரமாக இன்பத்தை அனுபவித்தவனும் இல்லை. நிரந்தரமாகத் துன்பத்தில் உழன்றவனும் இல்லை.



முதற்கட்டம் வரவு என்றால், அடுத்தக் கட்டம் செலவு.



முதற்கட்டம் இன்பமென்றால், அடுத்தக்கட்டம் துன்பம்.



முதற்கட்டமே துன்பமென்றால், அடுத்த கட்டம் இன்பம் இறைவனது தராசில் இரண்டு தட்டுக்களும் ஏறி ஏறி இறங்குகின்றன.



“இடுக்கண் வருங்கால் நகுக; அதனை

அடுத்தூர்வ தஃதொப்ப தில்”



என்றான் வள்ளுவன்.



எல்லாச் செல்வங்களையும் நிரந்தரமாக எவனுக்கும் இறைவன் வழங்கியதில்லை.



அந்த நாளில் எனக்கு நல்ல பசியெடுத்தது; உணவு கிடைக்கவில்லை.



பின் பசியுமிருந்தது; உணவும் கிடைத்தது.



இப்போது உணவு கிடைக்கிறது; பசியில்லை. அடுக்கடுக்காகப் பணம் சேர்த்து, ஆயிரம் வேலிக்கு மிராசுதார்ரானார் ஒருவர்.



ஆன மறுநாளோ, அவரை ‘அரிசி சாப்பிடக்கூடாது; சர்க்கரை வியாதி’ என்று சொல்லிவிட்டார் டாக்டர்.



சீனாலவில் மாசே - துங் புரட்சி நடக்கும்போது பல ஆண்டுகள் காடுமேடுகளில் ஏறி இறங்கினார். மனைவியைத் தோளில் தூக்கிக்கொண்டு அலையக்கூட வல்லம பெற்றிருந்தார்.



புரட்சி முடிந்து, பதவிக்கு வந்து இரண்டே ஆண்டுகளில் நோயில் படுத்தார்.



ரஷ்யாவில் லெனின் கதையும் அதுதான்.



புரட்சி நடக்கும்வரை லெனின் ஆரோக்கிய மாகவே இருந்தார்.



பதவிக்கு வந்த சில மாதங்களிலேயே படுக்கையில் விழுந்தார்; சில ஆண்டுகளிலேயே மரணமடைந்தார்.



எனது தி.மு.க நண்பர்கள் ஒவ்வொருவரும் கடுமையான உழைப்பாளிகள். ரயிலிலும் கட்டை வண்டிகளிலும், கால்நடையாவும் சென்று கூட்டத்தில் பேசுவார்கள். போராட்டத்தில் ஈடுபட்டுச் சிறைச்சாலைக்குப் போவார்கள்.



அப்பொழுதெல்லாம் அவர்கள் உடல்நிலை நன்றாகவே இருந்தது.



அவரகள் பதவிக்கு வந்து நிம்மதியாக இருக்க வேண்டிய நேரத்தில் அவர்களில் பலருடைய ஆரோக்கியம் கெட்டு விட்டது.



எனது நண்பர் ஒருவர் படமெடுத்தார்.



முதற்படமே அபார வெற்றி. அளவுகடந்த லாபம்.



அடுத்த படத்திலிருந்து விழத் தொடங்கியது அடி. இன்னும் அவர் எழமுடியவில்லை.



இன்னொரு பட அதிபர்…



ஊமைப்படக் காலத்திலிருந்து தொழிலில் இருக்கிறார். ஆரம்பக் கட்டத்தில் பலபடங்கள் அவருக்குக் கை கொடுக்கவில்லை. மிகுந்த சிரம்ப்பட்டுச் சென்னைக்கு வந்து ஒருபடம் எடுத்தார்.



அவரது ‘வாழ்க்கை’யையே அந்தப் படம்தான் தீர்மானிக்க வேண்டும் என்று பேசிக்கொண்டார்கள்.



அந்தப் படம் அமோகமாக ஓடியது. ஒருபுது நடிகையை நட்சத்திர நடிகையாக்கிற்கு. அது தெலுங்கிலும் வெற்றி; இந்தியிலும் வெற்றி. அதுமுதல் அவர் தொட்டதல்லாம் வெற்றி.



பிறப்பிலிருந்து இறப்பு வரை துன்பமே இலாமல் வாழ்ந்தவர்கள் எத்தனை பேர்?



கண்களை மூடிக்கொண்டு எண்ணிப் பாருங்கள்.



ஒரு கட்டம் அப்படி என்றால், மறு கட்டம் இப்படி!



ஏற்றம் என்பது இறைவன் வழங்கும்பரிசு.



இறக்கம் என்பது அவன் செய்யும் சோதனை.



நீ நினைப்பது எல்லாமே நடந்துவிட்டால், தெய்வத்தை நம்ப வேண்டாம்.



எப்போது நீ போடும் திட்டம் தோல்வியுறுகிறதோ அப்போது உனக்கு மேலானவன் அதை நடத்துகிறன் என்று பொருள்.



எப்போது உன் திட்டங்கள் வெற்றி பெறுகின்றனவோ, அப்போது இறைவன் உனக்கும் அனுமதியளித்து விட்டான் என்று பொருள்.



“ஒன்றை நினைக்கின் அதுஒழிந்திட டொன்றாகும்

அன்றி அதுவரினும் வந்தெய்தும் - ஒன்றை

நிறையாது முன்வந்து நிற்பினும் நிற்கும்

என்யாளும் ஈசன் செயல்”



என்பது முன்னோர் பழமொழி.



“கற்பகத்தைச்சேர்ந்தார்க்குக்

காஞ்சிரங்ககாய் ஈந்தேன்

முற்பவத்தில்செய்தவினை”



இதுவும் அவர்கள் சொன்னதே.



உனது வாழ்க்கை பூஜ்ஜியத்திஏ ஆரம்பமாகிறது. அதற்கு முன்பக்கம் நம்பர் விழுந்தால் இறைவனின் பரிசு; பின் பக்கம் விழுந்தால் அவனது சோதனை.



மேடும் பள்ளமுமாக ஆழ்க்கை மாறி மாறி வந்தால் உனக்குப் பெரிய வீழ்ச்சியில்லை.



ஒரேயடியாக உச்சிக்கு நீ போய்விட்டால் அடுத்துப் பயங்கரமான சரிவு காத்திருக்கிறது.



என் வாழ்க்கை மேடும் பள்ளமுமாகவே போவதால்,என் எழுத்து வண்டி இருப்பத்தைந்தாண்டுக் காலாக ஓடிக்கொண்டிருக்கிறது.



இதைத்தான் ‘சகடயோகம்’ என்பார்கள். வீழ்ச்சியில் கலக்கமோ எழுச்சியில் மயகமோ என்றார்கள் நம் முன்னோர்கள்.



‘ஆண்டவனின் அவதாரங்களே ஆண்டவன் சோதனைக்குத் தப்பவில்லை’ என்று நமது இதிகாசங்கள் கூறுகின்றன.



தெய்வ புருஷன் ஸ்ரீராமனுக்கே பொய் மான் எது, உண்மை மான் எது என்று தெரியவில்லையே!



அதனால் வந்த வனைதானே, சீதை சிறையெடுகப்பட்டதும், ராமனுக்குத் தொடர்ச்சியாக வந்த துன்பங்களும்!



சத்திய தெய்வம் தருமனுக்கே சூதாடக்கூடாது என்ற புத்தி உதயமாகவிலையே!



அதன் விளைவுதானே பாண்டவர் வனவாசமும் பாரத யுத்தமும்!



முக்காலும் உணர்ந்த கௌதமனுகே,பொய்க்கோழி எது, உண்மைக் கோழி எது என்றுதெரியவில்லையே!



அதனால்தானே அகலிகை கெடுக்கப்பட்டதும், சாபம் பெற்றதும்.



ஆம், இறைவனின் சோதனை எவனையும் விடாது என்பதற்கு, இந்தக கதைகளை நமது இந்துமத ஞானிகள் எழுதி வைத்தார்கள்.



துன்பங்கள் வந்தே தீருமென்றும், அவை இறைவனின் சோதனைள் என்றும், அவற்றுக்காக்க் கலங்குவதும் கண்ணீர் சிந்துவதும் முட்டாள்தனமென்றும் உன்னை உணர வைத்து, துன்பத்திலும் ஒரு நிம்மதியைக் கொடுக்கவே அவர்கள் இதை எழுதி வைத்தார்க்க்.



இந்தக் கதைகளை ‘முட்டாள்தனமானவை’ என்று சொல்லும் அறிவாளிகள் உண்டு.



ஆனால்,முட்டாள்தனமான இந்தக் கதைகளின் தத்துவங்கள், அந்த அறிவாளிகளின் வாழ்க்கையையும் விட்டதிலை.



நான் சொல்ல வருவது, ‘இந்து மத்த்தின் சாரமே உனது லௌகீக வாழ்க்கையை நிம்மதியாக்கித் தருவது என்பதையே.



துன்பத்தைச்சோதனை என்று ஏற்றுக்கொண்டு விட்டால், உனக்கேன் வேதனை வரப்போகிறது?



அந்தச் சோதனையிலிருந்து உன்னை விடுவிக்கும் படி நீ இறைவனை வேண்டிக்கொள்; காலம் கடந்தாவது அது நடந்துவிடும்.

தர்ம்ம் என்றும், சத்தியம் என்றும், நேர்மை என்றும், நியாயம் என்றும் சொல்லி வைத்த நமது மூதாதையர்கள்முட்டாள்களல்ல.



கஷ்டத்திலும் நேர்மையாக இரு.



நீ ஏமாற்றப்பட்டாலும் பிறரை ஏமாற்றாதே.

உன்வாழ் நாளிலேயே அதன் பலனைக்காண்பாய்.



தெய்வ நம்பிக்கை உன்னைக் கைவிடாது.



4. பாவமாம், புண்ணியமாம்!



இதுவரை யாருடைய பெயரையும் நான் குறிப்பிடவிலை.



இப்போது ஒருவருடைய பெயரை குறிப்பிட விரும்புகிறேன்.



பட அதிபர் சின்னப்ப தேவரை நீ அறிவாய்.



சிறு வயதிலிருந்தே அவர்தெய்வ நம்பிகை யுள்ளவர்.



சினிமாத் தொழிலிலேயே மதுப்பழக்கமோ, பெண்ணாசையோ இல்லாத சிலரில் அவரும் ஒருவர்.



மிகவும் உத்தமர்கள் என்று சொல்லத்தக்க உயர்ந்தோரில் ஒருவர். முப்பது முப்பத்தைந்து வயதுவரை, அவரது வாழ்ஐ கடுமையான வறுமையிலும் ஏழ்மையிலும் கழிந்தது.

அப்போதும் அவர் நாணயத்தை நேர்மையையும் விட்டதில்லை.



குஸ்தி கோதா நடத்தினார். சிறிய பால் பண்ணை நடத்தினார். ஜூபிடர் பிக்சர்ஸ் படங்களில் ஸ்டண்ட் நடிகராக வேலைபார்த்தார்.



அவரது வரலாறு உழைத்து முன்னேற விரும்புகிறவர்களுக்கு ஒரு பாடமாகும்.



அந்த நேரத்தில் ஒரு வெற்றிலை பாக்குக் கடையில் அவருகு ஆறு ரூபாய் வரை கடனாகிவிட்டது.



கடைக்காரன் அவர் கழுத்தில் துண்டைப் போட்டு முறுக்கினான்; அந்தக் கடையிருகும் பக்கமே போக முடியாதபடி அவதிப்பட்டார்.



அடிக்கடி கோவைக்குப் பத்து மைலுக்கு அப்பாலிருக்கும் மருதமலைக்குப் போய் ‘முருகா!, முருகா!’ என்று அழுவார்.



அந்தக் கோவிலோ ஜன நடமாட்டமில்லாத கோவில்.



கடைக்காரன் கோபித்துக் கொண்ட அன்று இரவு. அந்த மருதமலைக் கோவிஇல் போய் உட்கார்ந்து கொண்டு அழுதார்: “முருகா! காப்பாற்று” என்று வேண்டிக் கொண்டார்.



நள்ளிரவில், காடுகள் நிறைந்த அந்த மலையைவிட்டு இறங்கினார்.



வழியில் ஒரு சிகரெட் பாக்கெட் கிடந்தது.



அதைக் காலால் உதைத்துக்கொண்டே நகர்ந்தார்.



கொஞ்சதூரம் வந்ததும் என்ன தோன்றிற்றோ?



அந்த சிகரெட் பாக்கெட்டை எடுத்துப் பார்த்தார்



உள்ளே இர்ணுட சிகரட்டுகளும்,பத்து ரூபாய் நோட்டும் இருந்தன.



அப்போது அவரது மனநிலை எப்படி இருந்திருக்கும்?



“நலவனாக வாழ்ந்தோம்ந தெய்வத்தைநம்பினோம்; தெய்வம் கைவிடவில்லை” என்று தனே எண்ணியிருக்கும்!



அந்த முருகன் அவரை வாழ வைத்தான்.



ஒவ்வொருநாளும், “முருகா! முருகா! ” என்று உருகுகிறார்.

“தனக்கு நஷ்டம் வந்தாலும் பிறருக்கும் நஷ்டம் வரக்கூடாது” என்று தொழில் புரிகிறார்.



அதனால், அவர் நாளுக்குநாள் செழித்தோங்குகிறார்.



நீயும் நல்லவனாக இரு.



தெய்வத்தை நம்பு.



உனக்கு வருகிற துன்பமெல்லாம்,பனிபோலப் பறந்து ஓடாவிட்டால், நீ இந்து மத்த்தையே நம்ப வேண்டாம்.



“பாவமாம், புண்ணியமாம்; எந்த மடையன் சொன்னான்?”



“சொர்க்கமாம், நரகமாம்! எங்கே இருக்கின்றன அவை?”



“பாவமும் புண்ணியமும் பரலோகத்தில்தானே? பார்த்துக்கொள்வோம் பின்னாலே?”



இவையெல்லாம் நமது பகுத்தறிவு உதிர்க்கும்பொன் மொழிகள்.



பாவம்- புண்ணியம், சொர்க்கம் - நரகம் என்ற வார்த்தைகளைக் கேட்கின்ற இளைஞனுக்கு , அவை கேலியாகத் தெரிகின்றன.



‘நரம்பு தளர்ந்துபோன கிழவர்கள், மரண பயத்தில் உளறிய வார்த்தைகள் அவை. என்று அவன் நினைக்கிறான்.



நல்லதையே செய்தால் சொர்க்கத்துக்குப் போவாய் என்றும், அங்கே வகைவகையாக விருந்துகள் உனக்கு காத்திருக்குமென்றும், தீங்கு செய்தால் நரகத்துக்குச் செல்வாயென்றும், அங்கே உன்னை எண்ணெய்க் கொப்பரையில் போட்டு வறுத்தெடுப்பார்களென்றும் சொல்லப்படும் கைகள் நாகரிக இளைஞனுக்கு நகைச்சுவையாகத் தோன்றுவதில் வியப்பில்லை.



ஆனால் இந்தக் கதைகள், அவனை பயமுறுத்தி, அவன் வாழ்க்கையை ஒழுங்குபடுத்துவதற்காகவே தோன்றிய கதைகள்.



அவனுடைய பற்றாக்குறை அறிவைப் பயமுறுத்தித்தான் திருத்த வேண்டும் என்று நம்பிய நம் மூதாதையர் அந்தக கதைகளைச் சொல்லி வைத்தார்கள். இந்தக கதைகள் நூற்றுக்கு ஐம்பது பேரையாவது திருத்தியும் இருக்கின்றன. என்பதை அறிந்தால், நம் மூதாதையர் நம்பியுரைத்த கற்பனைகள் கூட , எவ்வளவு பலனை அளிக்கின்றன என்பதை அவன் அறிவான்.

பாவம் புண்ணியம் பற்றிய கதைகளை விடு; பரலோகத்துக்க உன் ஆவி போகிறதோ இல்லையோ, இதை நீ நம்ப வேண்டாம்.



ஆனால், நீ செய்யும் நன்மை தீமைகள், அதே அளவில் அதே நிலையில், உன் ஆயுட்காலத்திலேயே ...................................(தொடரும்  )

பட்டி மன்றம் பற்றி எனது குறிப்பும் வளரும்..........