Sunday, April 11, 2010

பாராளுமன்றத் தேர்தல் 2010 முடிவுகள் ????????????

முடிவுகள்??
 ஏற்கனவே தெரிந்தவை! அல்லது வெளிப்படையானவை என்றே சொல்லலாம்

அதாவது
வெற்றி பெறும் கட்சி ?,
எதிர்க் கட்சி ?
என்பன ஏற்கனவே மக்களுக்கு வெளிப்படையான  ஒன்று, இருந்தாலும் தேர்தல் முடிவுகள் இவ்வளவு மோசமான நிலைமைக்கு எதிர்க் கட்சிகளை இட்டுச்செல்லும் என்று யாரும் எதிர் பார்க்கவில்லை.

ஆக மொத்தத்தில் நாட்டின் வருங்கால அரசியல் நிலைமைகளில் நாட்டு மக்கள் கடந்த கால அரசியல் நிலைமைகள், சம்பவங்களை விடப் புதிதாக  எதையும் எதிர் பார்க்க முடியாது. 
ஆனாலும் சில நேரங்களில் அதைவிட மேலாதிக்கமான முடிவுகளை அரசாங்கம் எடுப்பதையும் எதிர் பார்க்காமல் இருக்க முடியாது
ஏனெனில் இப்போதைய அரசாங்கம் எடுக்கும் முடிவுகளை தட்டிக் கேட்கக்  கூடிய  அளவுக்கு எந்த ஒரு கட்சியிடமும் பலம் இல்லை எதிராளிகள் எல்லோரும் திரண்டாலும் முடியாது.
அரச கட்சியில் இருந்து பிளவை எதிர் பார்க்கவும்  முடியாது.

ஆக பெரும்பான்மையான மக்கள் இல்லை இல்லை  பெரும்  எண்ணிக்கையான மக்கள் தெரிவு செய்த அல்லது ஆதரித்த கட்சி என்ற முறையில் நாட்டில் பெரும் அளவிலான முன்னேற்றத்தை எதிர்  பார்க்க முடியும் என நம்புகிறேன்.
மேலும் ,
இந்த ஆளும் கட்சி அரசாங்கம்  இதுவரை நாட்டுக்கு செய்தவை யாவரும் அறிந்ததே
இனி செய்யப் போவதை யாவரும் அறிவோமே ...........
காத்திருப்போம் ..................
நம்பிக்கையுடன்  .............

  -கணா -