Thursday, December 23, 2010

MOBILE தொலைந்து விட்டதா POLICE STATION செல்ல தேவையில்லை

உங்களின் MOBILE PHONE தொலைந்து விட்டதா நீங்கள் கவலை பட வேண்டாம் .காவல் நிலையத்திற்கும் செல்ல வேண்டிய அவசியம் இருக்காது .உங்கள் மொபைலில் பின்புறம் IMEI என்று அழைக்கப்படும்( INTERNATIONAL MOBILE EQUIPMENT IDENTITY ) 14 இலக்க எண் மூலம் எளிதாக கண்டு அறியலாம் .இந்த IMEI NO மூலமாக தான் நமது நாட்டில் நிகழ்ந்து வரும் குற்றங்களுக்கான தடயமாக இருக்கிறது .உங்களின் MOBILE ஐ எடுத்து அதில் உள்ள SIM ஐ மாற்றினாலும் அவர்கள் நிச்சயமாக சிக்கி கொள்வார்கள் .
இரண்டு வழிகளில் அவர்களை கையும் களவுமாக பிடிக்கலாம் .
இந்த முறை அனைவருக்கும் பொருந்தும் அதாவது அனைத்து வகையான MOBIL PHONE கும் பொருந்தும்
முதலாவது முறை :.
send an e-mail to cop@vsnl.net with the following info.
Your name:
Address:
Phone model:
Make:
Last used No.:
E-mail for communication:
Missed date:
IMEI No:

இரண்டாவது முறையில் GUARDIAN என்ற SOFTWARE ஐ உங்களின் மொபைலில் INSTALL செய்வது மூலம் இதை இன்னும் சுலபமாக கண்டுப்பிடிக்க முடியும் .நீங்கள் நினைக்கலாம் அந்த SOTWARE ஐ UNINSTALL செய்தால் அதன் பயன்பாட்டை முடக்கப்படலாம் என்று .ஆனால் அதில் PASSWORD பயன்படுத்தப்படுகிறது எனவே கொஞ்சம் சிக்கல் கலந்த விஷயம் .அவர் உங்களின் SIM ஐ REMOVE செய்து அவரோட SIM ஐ போடும்போது அவரின் MOBILE NO உங்களின் மற்றொரு REFRENCE NO க்கு ஒரு MESSAGE வரும் .எனவே அவர் தப்பிக்க முடியாது எத்தனை முறை அவர் SWITCH OFF/ON செய்தாலும் .அவரின் MOBILE NO உங்களுக்கு குறுந்தகவல்ஆக வந்துக்கொண்டே இருக்கும் .
கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைய தளத்திற்கு சென்று உங்கள் MOBIL DEVICE க்கு ஏற்றாற்போல் நீங்கள் DOWNLOAD செய்துகொள்ளுங்கள் நண்பரே ..
GUARDIAN software ஐ தரவிறக்கம் செய்ய இங்கேhttp://www.guardian-mobile.com/ செய்யுங்கள் .

நன்றி 
www.abirajan.blogspot.com

-அன்புடன் 
-கணா-  

Wednesday, December 15, 2010

இலவசமாய் பேசுங்கள்

செல்போன் இருக்கா ஐந்து நிமிடங்கள் இலவம் ! !

இதற்க்கு எந்த ஒரு மென்பொருளும் தேவையில்லை.

ஐந்து நிமிடங்கள் எந்த நாட்டிக்கும் பேசலாம்.

ஒவ்வொரு இமெயில் அக்கவுண்ட்டுக்கு. ஐந்து நிமிடங்கள் பேசலாம்.

head phone தேவையில்லை

ஐந்து நிமிடம் வரை இலவசமாய் பேசலாம் !

அழைப்பு [ call ] முதலில் உங்களுடைய நம்பருக்குவரும்.

உடனே நிங்கள் type செய்த நம்பருக்கு ரிங் போகும்.

அந்த ரிங் ஒலி உங்களுடைய செல்போனில் கேட்கும்.

அதனுடைய முகவரி இங்கே

முதலில் Register பன்னுங்கள்


உங்களுடை இமெயில் உள்ள registration

code click செய்து Activate செய்யுங்கள்




-அன்புடன் 
-கணா- 

Sunday, November 28, 2010

தடை செய்யப் பட்ட இணையத் தளங்களில் நாம் எமது கை வரிசையைக் காட்ட.

குறிப்பு;- நண்பர்களே / நண்பிகளே!!!
நீங்கள் மாட்டினால் நான் பொறுப்பில்லை.!

நாம் அதிகம் இணையதளம் பாவிக்கும் இடங்களான அலுவலகம், பாடசாலை, பல்கலைக்கழகம் என்பவற்றில் பல எமக்கு பிடித்த இணையதளங்கள் குறிப்பாக Facebook .com, blogspot .com என்பன Network Administrator ஆல் தடை செய்யப் பட்டிருக்கும். இந்த கட்டுப்பாடுகளை உடைத்து எப்படி உங்களுக்கு பிடித்த தடைசெய்யப்பட்ட தளங்களுக்கு செலவது என்பதற்கான 07 முறைகள். இவற்றில் சில சமயம் குறிப்பிட்ட ஒரு முறை பயனளிக்காத பட்சத்தில் மற்றைய முறையை கையாளலாம்.

குறிப்பு :- இந்த முறைகளை தடை செய்யப்பட்ட சட்டவிரோத இணைய தளங்களுக்கு செல்வதற்கு பயன்படுத்தல் வேண்டாம் .

1 .URL இக்கு பதிலாக IP address ஐ பயன்படுத்தல்

ஒவ்வொரு இணையதளமும் தனது URL அதாவது Domain name இற்கு சமமான IP address ஐ கொண்டிருக்கும். உதாரணமாக facebook http://www.facebook.com என்ற URL இற்கு சமமாக 69.63.189.11 என்ற IP address ஐ கொண்டுள்ளது.இது போல் உங்களுக்கு தேவையான மற்ற இணைய தளங்களின் IP address ஐ கண்டு பிடிக்க http://www.ip-adress.com/reverse_ip என்ற தளம் பயனுள்ளதாக இருக்கும்.



2 .Google Cache ஐ பயன்படுத்தல்

நீங்கள் Google போன்ற search engines களை பயன்படுத்தி குறித்த இணையதளத்தை தேடும் பொது தேடல் முடிவுகள் கிடைக்கும்.அந்த குறிப்பிட உங்களுக்கு தேவையான search result இன் கீழ் பார்த்தீர்கள் என்றால் "Cache " என்ற ஒரு சொல் (லிங்க்) இருக்கும் அதனை நீங்கள் அழுத்தும் பொது உங்களுக்கு தேவையான குறித்த தடை செய்யப்பட்ட இணைய தளத்துக்கு செல்ல முடியும்.



3 .e -mail இல் பெறுதல்


web2mail என்ற ஒரு இலவச சேவை வழங்கும் தளம் ஒன்று உள்ளது. நீங்கள் இந்த தளத்தின் மின்னஞ்சல் முகவரியான www@web2mail.com இக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்ப வேண்டும் subject title ஆக உங்களுக்கு தேவையான தளத்தின் URLஐ இட்டு.இது நீங்கள் அனுப்பிய தள முகவரியின் web page இனை உங்கள் மினஞ்சல் Inbox இற் கு அனுப்பி வைக்கும்.



4 .Proxy Websites இனை பயன்படுத்தல்

இது தான் பலரால் பயன்படுத்தப்படும் பிரபல முறை.இப்படியான தளங்கள் ஆயிரக்கணக்கில் உள்ளன.இத்தளங்களுக்கு சென்று தடை செய்யப்பட்ட உங்களுக்கு வேண்டிய இணையதள முகவரியை கொடுத்தால் குறித்த தளத்துக்கு செல்ல கூடியதாக இருக்கும். மிக பிரபலமான இப்படியான சேவை வழங்கும் ஒரு தளம் http://www.hidemyass.com ஆகும்.



5 .Short URL முறையை கையாளல்

பெரிய URL களை சுருக்கி தரும் சேவையை வழங்கும் சில தளங்கள் உள்ளன. இப்படியான ஒரு தளத்துக்கு சென்று உங்களுக்கு தேவையான முகவரியை வழங்கி சுருக்கப்பட்ட முகவரியை பெற்று அதற்கு செல்வதன் மூலம் தடை செய்யப்பட்ட தளத்துக்கு செல்ல முடியும்.இப்படியான URL சுருக்கல் சேவை வழங்கும் பிரபல தளம் http://bit.ly இனை நீங்கள் பாவிக்கலாம்.



6 .Screen-Resolution.com

இந்த தளம் different resolution இல் உள்ள எந்த தளத்தையும் பார்வையிட உதவு கின்றது. அதுமட்டுமல்லாமல் மிகவும் சுவாரசியமான பயனுள்ள ஒரு தளம். இங்கு சென்றால் தடை செய்யப்பட்ட இணையதளங்களுக்கு நீங்கள் செல்ல உதவும்.


7 .Google Mobile Search

http://www.google.com/gwt/n என்ற இந்த தளம் குறித்த ஒரு இணைய தளத்தை செல் போன் இல் பார்த்தால் எப்படி இருக்கும் என பார்க்க உதவும் ஒரு தளமாகும்.

பேராதனை பல்கலை நண்பர்களுக்கு ;

நான் இதை IT cetre இல் try பண்ணி பார்த்துள்ளேன்
நீங்கள் cc இலும் try பண்ணி பாருங்கள் .
மாட்டினால் சங்குதான்
அதல try பண்ணுறதோட நிறுத்திக் கொள்ளுங்கள்.

அது மட்டுமல்ல்ல,
உங்களது facebook கணக்கை ஏதாவது அனுபதிக்கப்படாத proxy தளங்களினூடு open பான்னினால் அல்லது பண்ண முயன்றால் நீங்கள் பின்பு சாதாரணமாக open பண்ணும் பொது பல security வினாக்களுக்கு முகம் கொடுக்க வேண்டி வரும்.


-அன்புடன்-
-கணா-

Wednesday, November 24, 2010

கதைப்பதன் மூலம் , உங்கள் மொபைலுக்கு சார்ஜ் ஏற்ற முடியும் ..



மொபைல் போன்களில் அதிக சிரமம் தருவது, அதன் பேட்டரியை சார்ஜ் செய்வதுதான். எந்த போனாக இருந்தாலும், குறிப்பிட்ட சில நாட்களுக்கு மட்டுமே, அதன் Battery பேசுவதற்கு திறன் கொடுக்கும்.


இப்போது Multimedia இயக்கம், இன்டர்நெட் பிரவுசிங் போன்ற வேலைகள் பேட்டரியின் திறனை அதிகம் எடுத்துக் கொள்வதால், Battery charge செய்திடும் சிக்கல் இன்னும் அதிகமாகின்றன.


அமெரிக்க வல்லுநர்கள் இதற்கான ஒரு அதிசயமான தீர்வை நோக்கி தங்கள் ஆராய்ச்சியினைத் தொடங்கி உள்ளனர். ஒலி அலைகளை மின்சக்தியாக மாற்றும் ஆய்வை மேற்கொண்டுள்ளனர்.


காலமைன் லோஷனில் உள்ள ஸிங்க் oxide கொண்டு Nano Wire field உருவாக்கி, அதனை இரண்டு electrode  அமைத்து, ஒலி அலைகள் மூலம் அவற்றை நெருக்கிய போது 50 மில்லி வோல்ட் மின்சக்தி உருவாகி இருந்துள்ளது.

எப்படி எலக்ட்ரிக் சிக்னல்கள், ஸ்பீக்கர்களில் ஒலியாக வெளியேறுகிறதோ, அதே போல எதிர்வழியில், சரியான வேதியியல் பொருட்களைப் பயன்படுத்தி, ஒலி அலைகளை மின் அலைகளாகவும் மாற்றலாம்.


இதன் மூலம் மொபைல் போன்களில் பேசப்பேச, அந்த ஒலி அலைகளையே பயன்படுத்தி, அதில் உள்ள பேட்டரியை சார்ஜ் செய்திடலாம் என்று இந்த விஞ்ஞானிகள் முயற்சிக்கின்றனர்.

அதெல்லாம் சரி அப்பா ஓவரா சாச் ஏறினால்???

இனி நம்ம பேச்சுப் பீரங்கிகளுக்கு வாழ்க்கை தான்.
உங்கள் battery   யும் சார்ஜ் பண்ண அவர்களை நாட வேண்டி வரும்..

-அன்புடன்
-கணா-

Tuesday, November 16, 2010

facebook பாவிக்கப் படியுங்கள்


எல்லோருக்கும் எனது
 
வணக்கங்கள்
இன்றைய நாட்களில் பலர் மத்தியிலும் பிரபல்யம் பெற்ற facebook பல பிரச்சனைகளுக்கு காரணமாக பல நாடுகளில் இருந்துள்ளது என்று என்றோ கேள்விப் பட்டு இருக்கிறோம்.

ஆனாலும் இன்று அந்தப் பிரச்சனை இலங்கைக்கு வந்துள்ளது.
facebook இனால் இற்றைக்கு 50 வரையிலான புகார்கள் இலங்கைப் போலீஸ் நிலையங்களில் பதிவு செய்யப் பட்டு இருப்பதாக பத்திரிக்கை கட்டுரை ஒன்று சொல்லுகிறது.

அதை விட அண்மையில் யாழ்ப் பானத்தில் நடைபெற்ற சில சம்பவங்களும் நீங்கள் கேள்விப் பட்டு இருப்பீர்கள் .

அதைவிட பல பிரச்சனைகளை நானும் பார்த்தும், நெருங்கிய நண்பர்கள் மூலம் கேட்டும் இருக்கிறேன்
இதற்கான காரணத்தை நோக்க வேண்டிய நேரம் வந்துள்ளது.
இதனால் அதிகம் பாதிக்கப் படுவது பெண்கள் ஆக இருந்தாலும் ஆண்களும் கூட மிக கவனமாக இருக்க வேண்டிய நிலைமையை வெளி நாடுகளில் இடம் பெற்ற சில சம்பவங்கள் மூலம் அறியக் கூடியதாக உள்ளது.

facebook என்பது ஒரு சமூக வலையமைப்பு ஆக இருப்பதனால் பலருக்கு உண்மையில் பிரயோசனமானதாக இருப்பதை இல்லை என்று சொல்ல முடியாது.


ஆனாலும் இணையங்களுடன் தொடர்பு வைத்திருப்பவர்கள் எதையும் எப்பவும் ஆராய்ந்ததும் பின்விளைவுகளை யோசித்தும் உருவாக்கியதை கட்டுப் படுத்தத் தெரிந்துமே இணையத்தில் எவ் வேலைகளையும் செய்ய வேண்டும்.

ஏனெனில் இணையம் பற்றி உங்களுக்கு சொல்லத் தேவை இல்லை
அதை எப்படிக் கட்டுப் படுத்தினாலும்
எங்கு எதை தடை செய்தாலும்
அவற்றை எல்லாம் சென்று பார்க்க பல வலைத் தளங்கள் இன்றும் உருவாகிக் கொண்டுதான் இருக்கின்றன.
இதெல்லாம் ஏன்?
நீங்களே சிலவேளை அவ்வாறான இணையத்தளங்களைப் பயன் படுத்தி இருக்க கூடும் .



facebook பற்றி இன்று எழுந்திருக்கும் இந்தப் பிரச்னைக்கு பல காரணங்கள் உள்ளன
சுருக்கமாகச்சொன்னால்
முதலில் இணையம் பற்றி நன்கு அறிய வேண்டும்
பின்பு facebook பற்றி நன்கு அறிய வேண்டும்
அதன்பின்பு தான் அதில் கணக்கு ஒன்றை ஆரம்பிப் பாத்து நல்லது என்பதே நான் சொலக் கூடியது.
இன்று
எனக்குத் தெரிந்த வரையில்
பலர்
இணையம் பற்றி தெரியாது facebook கணக்கு ஆரம்பித்து உள்ளனர்.



எனது அனுபவம் ஒன்றை இங்கு தருகிறேன்...
ஒருநாள் என்னிடம் ஒரு நபர் கேட்டார்
"மச்சான் ஒரு facebook கணக்கு தொடங்க வேண்டும் எப்படி" என்று!
நான் அதற்கென்ன என்று அவரை அழைத்துக் கொண்டு சென்று mail address என்ன என்று கேட்ட போது தான் தெரியும் அவருக்கு mail address இல்லாதது மட்டுமல்ல இணையம் பற்றியோ கணணி பற்றியோ பூரண அறிவு இல்லை !.
ஆனாலும் பல காரணிகள் அவருக்கு அந்தப் facebook கணக்கை ஆரம்பிக்கத் தூண்டி இருந்தமை பின்பு எனக்குத் தெரிய வந்தது .

ok என்று மெயில் ஒன்று உருவாக்கி facebook கணக்கும் உருவாக்கிய போது அவர் என்னிடம் கேட்ட அடுத்த கேள்வி
"எப்படி போட்டோ போடுவது "
நான் கேட்டேன் "ஏன்" என்று
இல்லை சும்மா போடலாம் தானே என்றார்.



உண்மையில் பிரச்சனை இங்குதான் எழுகிறது
facebook பாவிக்கும் போது கணக்கு ஆரம்பிக்கத் தொடங்குவது முதல் நாம் அங்கு கேட்கும் கேள்விகளுக்கு ஒழுங்காக விடை அளிக்க வேண்டும்
மிக முக்கியமாக கணக்கு ஆரம்பிக்க முதல் facebook Account setting பற்றி ஒழுங்காக தெரிந்து வைத்திருக்க வேண்டும்.
உண்மையான தகவல்களை வெளியிடுவது
புகைப் படங்களை வெளியிடுவது
நண்பர்களை இணைப்பது
chat பண்ணுவது பற்றி மிகவும் கவனமாக இருக்க வேண்டும்

உங்கள் விபரங்கள் புகைப் படங்கள் போன்றவற்றை யார் யாருடன் பகிர்ந்து கொள்ளப் போகிறீர்கள் பற்றி தெளிவாக setting செய்து கொண்ட பிறகே புகைப் படங்களை வெளியிட முயற்சிக்க வேண்டும்.

மொத்தத்தில் facebook பற்றி முதலில் நன்கு படிக்க வேண்டும்...
பெண்கள் மட்டுமல்ல ஆண்களும் தான் ...



-அன்புடன்
-kana-

பல்கலைக்கழக நெருக்கடியும் அரசின் அணுகுமுறையும்

பல்கலைக்கழகக் கல்வியில் மாற்றம் கொண்டுவரப்பட வேண்டியதன் அவசியம் குறித்து சமீபகாலமாக பேசப்பட்டுவருகின்றது. அவ்வாறானதொரு மாற்றம் தேவையானதுதான் என்பதை இன்று நாடு உணரத் தலைப்பட்டுள்ளது. அவ்வாறான மாற்றம் பலாத்காரமாக ஏற்படக்கூடாது. பல்கலைக்கழக சமூகத்தின் ஒத்துழைப்புடனேயே அதனைச் செய்ய வேண்டும். ஏற்படுத்தப்பட வேண்டிய மாற்றம் அதனூடாக பல்கலைக்கழக மாணவர்களுக்கும் போதனாசிரியர்கள், விரிவுரையாளர்களுக்கும் கிட்டக்கூடிய பலாபலன், நன்மைகள் பற்றி எடுத்து விளக்கப்பட வேண்டும். அதோடு நின்றுவிடாமல் பல்கலைக்கழக மாணவர் சமூகத்தின் பெற்றோர்களுக்கும் தெளிவுபடுத்தப்பட வேண்டும்.
பல்கலைக்கழக மாணவர் சமூகத்துக்கோ, பெற்றோர்களுக்கோ, பல்கலைக்கழக கல்விமான்களுக்கோ எதுவுமே தெரிவிக்கப்படாமல் இதுவிடயத்தில் அரசு தான்தோன்றித்தனமாகச் செயற்படமுனைவதால் தான் கடந்துபோன நாட்களில் விரும்பத்தகாத சம்பவங்கள் இடம்பெற்றன. அரசாங்கத்தின் தூரநோக்கற்ற செயற்பாடுகளால் அது அரசியல்மயப்படுத்தப்பட்டதோடு அதன் தாக்கம் பல்கலைக்கழக மாணவர்கள் வீதியில் இறங்கும் நிலை ஏற்பட்டது. அதுமட்டுமன்றி பல்கலைக்கழக மாணவர்கள் பலர் சிறையிலடைக்கப்படும் நிலை கூட ஏற்பட்டது. மக்களுக்குத் தெரிவிக்கப்படாத மறைமுகமாக எடுக்கப்பட்ட முடிவொன்று காரணமாக விரும்பத்தகாத சம்பவங்கள் இடம்பெற்றன.
கடந்துபோன நீண்டகாலத்தோடு ஒப்பிட்டுப்பார்க்கும் போது பல்கலைக்கழகங்கள் சாதித்த சமூகச் செயற்பாடுகள் இன்று மாற்றம் கண்டுள்ளது. அன்று 8ஆம் வகுப்பு சித்தியடைந்திருந்தால் அது பாடசாலை ஆசிரியராக வரும் தகுதியாகக் காணப்பட்டது. அன்று பல்கலைக்கழகக் கல்வி உயர்கல்விமான்களை நாட்டுக்குத் தரும் நிறுவனமாகவே காணப்பட்டது. இன்று பாடசாலை ஆசிரியராக வருவதற்கு பல்கலைக்கழகப் பட்டம் அவசியம் என்ற நிலை உருவாகியுள்ளது. எட்டாம் வகுப்புத் தகைமையிலிருந்து க.பொ.த.சாதாரண தரம், உயர்தரம் என்று வந்து படிப்படியாக மாற்றம் கண்டு ஆசிரிய பதவிக்கு பட்டதாரி தகைமை அவசியம் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. ஒரு சாதாரண தொழில்வாய்ப்பைப் பெற்றுக்கொள்வதற்கு பல்கலைக்கழகப் பட்டம் தேவைப்படுகின்றது.
இவ்வாறான நிலையில் அரசு பல்கலைக்கழகங்களுக்குத் தெரிவாகும் மாணவரின் தொகை மட்டுப்படுத்தப்பட்டதாகவே உள்ளது. நாட்டின் ஒவ்வொரு பிரஜையும் பட்டப்படிப்பைப் பெற்றுக்கொள்ள வேண்டுமென்ற ஒரு நிலை உலகளாவிய மட்டத்தில் உருவாகியிருக்கின்றது. அரச பல்கலைக்கழகங்களில் தெரிவாகும் அத்தனை மாணவர்களையும் உள்வாங்குவதற்கான வளம் கிடையாது. இதனை யாராலும் மறுத்துரைக்க முடியாது. இவ்வாறான சூழ்நிலையில் தனியார் பல்கலைக்கழகங்களின் தேவைப்பாடு முக்கியமானதொன்றாகவே காணப்படுகிறது. தனியார் பல்கலைக்கழகங்களில் உயர்கல்வியைத் தொடர விரும்புவோருக்கு வாய்ப்பளிக்க எவராலும் மறுக்க முடியாது. அரச பல்கலைக்கழகங்களில் பல்கலைக்கழக அனுமதி கிடைக்காத மாணவர்களைத் தொடர்ந்து உயர்கல்வியைப் பெற்றுக்கொடுக்க விரும்பும் பெற்றோருக்கு இதுவொரு நல்ல வாய்ப்பாகவே உள்ளது.
தனியார் பல்கலைக்கழகங்களில் கல்வியைத் தொடர்வதற்கு இடமளிப்பதன் காரணமாக இலவசக் கல்வி பாதிக்கப்படும் என்று கூறுவதற்கில்லை. பாடசாலைக் கல்வித்துறையில் தனியார் ஈடுபடுவதாலும் இலவசக் கல்விமுறை ஒழிந்துவிடப் போவதில்லை. ஒரு போட்டித் தன்மை உருவாகலாம். எந்தப் பாடசாலையில், எந்தப் பல்கலைக்கழகத்தில் பிள்ளையை சேர்ப்பதால் கூடுதல் பலன்கிட்டும் என்ற மனநிலை பெற்றோருக்கு ஏற்படலாம். இதனைக் கூட ஆரோக்கியமாகவே பார்க்க வேண்டும். தனியார் பல்கலைக்கழகங்களுக்கு அனுமதி வழங்கப்படும்போது அதன் கல்வித் தகுதியை நிர்ணயிக்கும் பொறுப்பு அரசுக்கு இருக்கின்றது. அந்த தகைமை நிர்ணயம் சட்ட ரீதியாக்கப்பட்டு அதனை தனியார்துறையினர் மீறாது செயற்பட சட்டம் வகுக்கப்பட வேண்டும். அவ்வாறான அடிப்படையில் தனியார் பல்கலைக்கழகங்களுக்கு அனுமதி வழங்குவது தப்பாக முடியாது.
இவற்றுக்கும் மேலாக நாம் இங்கு சுட்டிக்காட்ட விரும்புவது. கல்வித்துறையை தனியார் மயப்படுத்துவதற்கு முன்னர் அது குறித்து கல்விச் சமூகத்திற்கும் பல்கலைக்கழகச் சமூகத்திற்கும் ஒட்டுமொத்தமாக பிள்ளைகளின் எதிர்காலம் குறித்து சிந்திக்கும் பெற்றோர்களிடம் இது குறித்து பேசவேண்டும். அதன் பலாபலன்கள் பற்றி தெளிவுபடுத்தப்படவேண்டும். அதற்கான ஒத்துழைப்பைப் பெற்றுக்கொள்ள வேண்டும். இவற்றில் ஒன்றையுமே செய்யாமல் தன்னிச்சைப் போக்காக முடிவெடுத்து நாம் தீர்மானித்துவிட்டோம். அதனை நீங்கள் ஏற்றுத்தான் தீரவேண்டுமென்ற கொள்கையில் அரசு செயற்பட முனைந்ததால் ஏற்பட்ட எதிர்வினை எவ்வளவு பாரதூரமானதாக, மோசமானதாக அமைந்துவிட்டது என்பதை சிந்தித்துப் பார்க்கவேண்டும். பல்கலைக்கழக மாணவர்களின் சந்தேகம் ஆரம்பத்திலேயே களையப்பட்டிருந்தால் இன்று இத்தகைய அவலம் ஏற்பட்டிருக்க முடியாது. இந்த விடயத்தில் பல்கலைக்கழக மாணவர் மீது தொடர்ந்தும் அம்பெறிந்து கொண்டிராமல் சாதகமான போக்கைக் கடைப்பிடித்து அந்த மாணவர்களின் எதிர்காலத்தை ஒளிபெறச் செய்யும் வழிவகைகளில் அரசு கவனம் செலுத்த வேண்டுமென வலியுறுத்துகின்றோம்

-kana-
source;
http://www.thinakkural.com

Saturday, November 13, 2010

சுவை - நகை

படித்ததில் பிடித்தவை ..,


நன்றி .

"http://thoppithoppi.blogspot.com/2010/11/bio-data.html"
-கணா-

Tuesday, October 5, 2010

facebook இல் நண்பராக இருந்து உங்களை நீக்கியவரை கண்டு பிடிக்க முடியும்


எனது நண்பர்கள் சிலர் தமது facebook   கணக்கில் மொத்தமாக இருந்த நண்பர்களின் எண்ணிக்கை குறைவதாகக் கவலைப் படுகிறார்கள். காரணம் அவர்களது நண்பர்களுக்கு முக்கியமாக நண்பிகளுக்கு  இவர்கள் online இல் அடிக்கும் அலுப்புத் தான் என்று தெரியாது போலும். என்னென்றாலும் நண்பர்கள்  இல்லையா அதுதான் யார் அப்படி தப்பி ஓடுகிறார்கள் எண்டு கண்டு பிடிக்க ஆர்வமாக இருக்கிறார்கள். அப்படி ஆர்வப் பாடுபவர்களுக்கான ஒரு பதிவு தான் இது......

இந்த கணினி உலகில் பேஸ்புக் என்பது ஒரு அபரிமிதமான வளர்ச்சியை பெற்றுள்ளது. நம்மில் பலர்  பேஸ்புக் உபயோகிக்கிறார்கள். நம் மெயிலுக்கு பேஸ்புக்கில் இருந்து ஒரு மெயில் வரும் இத்தனை நண்பர்கள் உங்களை நண்பர்கள் பட்டியலில் இருந்து நீக்கி உள்ளனர் என்று வரும் ஆனால் யார் யார் நம்மை நண்பர்கள் பட்டியலில் இருந்து நீக்கி உள்ளனர் என்பதை கண்டறியும் வசதி பேஸ்புக்கில் இல்லை. மற்றும் நாம் நண்பர்கள் கோரிக்கை அனுப்பி இன்னும் எத்தனை கோரிக்கைகள் ஏற்க்கபடாமல் உள்ளது என்றும் எப்படி கண்டறிவது என்று கீழே பார்ப்போம்.

இந்த வசதியை பெற நீகள் இந்த லிங்கில் http://www.unfriendfinder.fr/help/download சென்று அங்கு உள்ள Download என்ற பட்டனை அழுத்தி ஸ்கிரிப்ட் பைலை டௌன்லோட் செய்து கொள்ளுங்கள். உதவிக்கு கீழே உள்ள படத்தை பார்த்து கொள்ளுங்கள்

  1. இந்த ஸ்கிரிப்ட் பைலை டௌன்லோட் செய்தவுடன் உங்கள் பிரௌசரில் தானகவே இணைந்து கொள்ளும்.
  2. இந்த ஸ்கிரிப்ட் பைல் Google Chrome/ Opera / Mozillaa / Safari ஆகிய இயங்கு தளங்களில் இயங்குகிறது.
  3. நீங்கள் Mozilla firefox உபயோகித்து கொண்டிருந்தால் இந்த ஸ்கிரிப்ட் பைலை நிறுவ நீங்க உங்கள் பிரவுசரில் https://addons.mozilla.org/en-US/firefox/addon/748/  நிறுவியிருக்க வேண்டும்.
  4. இந்த ஸ்கிரிப்ட் பைலை நிறுவியவுடன் உங்கள் பேஸ்புக் அக்கௌண்டில் நுழைந்து கொள்ளுங்கள்.
  5. உங்களுக்கு புதியதாக ஒரு வசதி Unfriends என்ற லிங்க் இருக்கும்.

  • இதில் கடந்த ஒரு வாரத்தில் உங்களை பட்டியலில் இருந்து நீக்கியவரின் விவரங்கள் தெரியும்.
  • இதில் உள்ள இன்னுமொரு வசதி ஏற்க்கபடாத கோரிக்கைகள்.
  • நாம் அனுப்பிய நட்பு கோரிக்கைகளை ஏற்காமல் இருப்பவர்களின் விவரங்களையும் இதில் பார்த்து கொள்ளலாம்.
  • இதில் நாம் அனுப்பிய நட்பு கோரிக்கைகளை நாமே அகற்றி விடலாம்.
இனி உங்களிடமிருந்து யாரும் தப்பி விட முடியாது. 

-நானும் உங்கள் நன்பேண்டா...../இல்லாட்டி நண்பேண்டி.... - 

-கணா- 

Monday, September 27, 2010

Friday, September 24, 2010

உலகத்தில் உள்ள தமிழ் வானொலிகள் எல்லாம் ஓரிடத்தில்..........


நீங்கள் இணையத்தில் வேலை செய்யும் போது வானொலியைக்  கேட்க அல்லது
இணையத்தின் மூலம் ஏதாவது விரும்பிய தமிழ் வானொலி அலைவரிசையைக் கேட்க  கீழே உள்ள widget  உங்களுக்கு மிகவும் பிரயோசனமாக இருக்கும்.



வருங்காலங்களில் உங்களுக்காக  இது எனது blog site  இன் வலது பக்கத்தில்  இடத் தீர்மானித்து  உள்ளேன்.

Monday, September 13, 2010

60th anniversary of FACULTY OF ENGINEERING

இன்னும் சில தினங்களில்,
இலங்கையில்  கொழும்பில் முதலாவதாக 1942 இல் ஆரம்பிக்க்கப் பட்டு இப்போது பேராதனையில் இயங்கி வரும் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் 1950 யூலை முதலாம் திகதி ஆரம்பிக்கப் பட்ட ( தொழில்நுட்பக்  கல்லூரியாக இருந்து பட்டம் வழங்கக் கூடிய நிறுவனமாக இலங்கைப் பல்கலைக் கழகத்துடன் இணைக்கப் பட்ட) பொறியியல் பீடம்  தனது அறுபது ஆண்டு பூர்த்தியை கொண்டாடுகிறது.


அதற்காக பொறியியல் பீடத்தில்  மிகவும் பிரம்மாண்டமான  அளவில் கண்காட்சி ஒன்று வருகின்ற பதினேழாம் திகதி முதல் இருபத்திரண்டாம் திகதி வரை ஏற்பாடு செய்யப் பட்டு உள்ளது.


மாணவர்கள் பலரும் பல வகையான  காட்சிப் பொருட்களை  காட்சிப்படுத்தத் தயாராகி வருகின்றனர். (என்னைப் போல வெட்டியாகவும் சிலர் இருக்கத்தான் செய்கின்றனர்).

அதற்காக பலதரப்பட்டவகையில் கண்காட்சிக் கூடங்கள் அமைக்கப் பட்டு வருகின்றது.



ஆய்வுகூட காட்சிப்படுத்தல்கள் ;



 மாணவர்களது புதிய ஆக்கங்கள் ;


 தேடல்,ஆய்வு  முடிவுகள் ;

மற்றும் தற்போதைய நடைமுறைக்கு ஏற்ப எழும் பொறியல் சார்ந்த பிரச்சனைகள் பலவற்றுக்கான தீர்வுகள் அதுபற்றிய மாதிரிகள் என்பனவும் காட்சிப் படுத்தலுக்காக தயார்ப் படுத்தப் பட்டு வருகின்றன.

அதைவிட பாடசாலை மாணவர்களது புத்தாக்க முயற்சிகளுக்கும் இடமளிக்கப் பட்டுள்ளது ;


இதற்கு மேலதிகமாக சில நிறுவனங்களும் காட்சிப் படுத்தல்களை மேற்கொள்ள இருக்கின்றன.

அத்துடன் மொரட்டுவை பல்கலைக்  கழகத்தில் மிகவும் அண்மையில் கண்காட்சி ஒன்று நடை பெற்று முடிந்திருப்பதால் இது மேலும் சூடு பிடித்திருக்கிறது.
இன்னும் சூடு பிடிக்கும்ம்ம்ம்..


-அன்புடன்-
-கணா-

Saturday, September 11, 2010

இலவசமாக....

நம்ம ஆளுங்களுக்கு எதையும் இலவசமா செஞ்சு தான் பழக்கம்
என்ன சொன்னாலும்
முதல் கேள்வி
காசா ? என்கிறது தான்
இப்ப நீங்களே சில நேரம் "இலவசமாக.."
எண்ட தலையங்கத்தை பாத்திட்டு தான் வந்திருப்பீங்க
இல்லையா?
அடுத்தவண்ட ஓசி நெட் கனேக்சனில ஓசியா pdf books டவுன்லோட் பண்ண
பலர் பல இணைய தளங்களில try பண்ணி கடைசியா காசு கேக்க
வாயை பிளந்த கதைகள் நிறைய உண்டு
எனக்கும் அப்பிடி அனுபவம் இருக்குது.
இதுக்கு ஒரு நல்ல இணையதளம் உங்களுக்கு .



http://sciencebooksonline.info/

என்னோட  படிக்கிற நண்பர்களுக்கு..

http://sciencebooksonline.info/engineering.html


அன்புடன்
-கணா-

Thursday, September 2, 2010

HAPPY MARRIED LIFE

CONGRATULATIONS &
ENGAGEMENT WISHES
for our batch mate



You're engaged...
For all of your lives,
May you find in each other


The friend of your heart...
The joy of your world...
The love of your life!
 


To say wishes:

-kana-
-e06 pera-

Monday, August 9, 2010

மிகவும் பிரபலமான சமூக இணையத் தளங்கள் (social networks )

தரப் படுத்தலில் முன்னிலையிலுள்ள சமூக இணையத் தளங்கள்
(social  networks)

facebook
2 - eBizMBA Rank | 250,000,000 - Estimated Unique Monthly Visitors | 3 - Compete Rank | 2 - Quantcast Rank | 2 - Alexa Rank.


MySpace
16 - eBizMBA Rank | 122,000,000 - Estimated Unique Monthly Visitors | 16 - Compete Rank | 16 - Quantcast Rank | 17 - Alexa Rank.
twitter
27 - eBizMBA Rank | 80,500,000 - Estimated Unique Monthly Visitors | 39 - Compete Rank | 31 - Quantcast Rank | 11 - Alexa Rank.

Linkedin
47 - eBizMBA Rank | 50,000,000 - Estimated Unique Monthly Visitors | 61 - Compete Rank | 50 - Quantcast Rank | 29 - Alexa Rank.


Ning
143 - eBizMBA Rank | 42,000,000 - Estimated Unique Monthly Visitors | 180 - Compete Rank | 120 - Quantcast Rank | 128 - Alexa Rank.



Tagged
225 - eBizMBA Rank | 30,000,000 - Estimated Unique Monthly Visitors | 382 - Compete Rank | 151 - Quantcast Rank | 141 - Alexa Rank.



classmates
228 - eBizMBA Rank | 29,000,000 - Estimated Unique Monthly Visitors | 487 - Compete Rank | *425* - Quantcast Rank | 969 - Alexa Rank.



hi5
479 - eBizMBA Rank | 27,000,000 - Estimated Unique Monthly Visitors | 983 - Compete Rank | 392 - Quantcast Rank | 62 - Alexa Rank.


myyearbook
617 - eBizMBA Rank | 12,000,000 - Estimated Unique Monthly Visitors | 522 - Compete Rank | 293 - Quantcast Rank | 1,036 - Alexa Rank.



Meetup
635 - eBizMBA Rank | 8,000,000 - Estimated Unique Monthly Visitors | 644 - Compete Rank | 732 - Quantcast Rank | 528 - Alexa Rank.



bebo
655 - eBizMBA Rank | 7,000,000 - Estimated Unique Monthly Visitors | 944 - Compete Rank | 434 - Quantcast Rank | 588 - Alexa Rank.


mylife
865 - eBizMBA Rank | 6,000,000 - Estimated Unique Monthly Visitors | 118 - Compete Rank | 688 - Quantcast Rank | 1,789 - Alexa Rank.



friendster
955 - eBizMBA Rank | 5,000,000 - Estimated Unique Monthly Visitors | 1,920 - Compete Rank | 643 - Quantcast Rank | 301 - Alexa Rank.


myHeritage
1,097 - eBizMBA Rank | 4,800,000 - Estimated Unique Monthly Visitors | 707 - Compete Rank | 595 - Quantcast Rank | 1,989 - Alexa Rank.



Multiply
1,136 - eBizMBA Rank | 4,600,000 - Estimated Unique Monthly Visitors | 2,446 - Compete Rank | 677 - Quantcast Rank | 285 - Alexa Rank.



orkut
1,303 - eBizMBA Rank | 4,500,000 - Estimated Unique Monthly Visitors | 2,219 - Compete Rank | *1,630* - Quantcast Rank | 59 - Alexa Rank.


badoo
1,329 - eBizMBA Rank | 4,400,000 - Estimated Unique Monthly Visitors | 3,187 - Compete Rank | *650* - Quantcast Rank | 152 - Alexa Rank.

gaiaonline
1,334 - eBizMBA Rank | 4,350,000 - Estimated Unique Monthly Visitors | 1,781 - Compete Rank | 733 - Quantcast Rank | 1,489 - Alexa Rank.

BlackPlanet
1,952 - eBizMBA Rank | 4,000,000 - Estimated Unique Monthly Visitors | 1,322 - Compete Rank | *1,721* - Quantcast Rank | 2,814 - Alexa Rank.






SkyRock
2,866 - eBizMBA Rank | 3,000,000 - Estimated Unique Monthly Visitors | 7,380 - Compete Rank | *980* - Quantcast Rank | 237 - Alexa Rank.