Thursday, January 7, 2010

இணையத்தில் ஒரு கணணி வியத்தகு இணையவழி இலவச இயங்குதளம்




ஆச்சரியப்பட கூடியவிதத்தில் இணையத்தில் கணணியை உருவாக்கியுள்ளார்கள் இணைய வல்லுனர்கள். இந்த இணையத்தில் கணணி என்பது (A computer in a web page) நீங்கள் கணணியை ஆரம்பித்து கடவுச்சொல் வழங்கி கணணி திறக்கும் போது கணணித்திரை (Desktop) எமது கண்களுக்கு எவ்வாறு புலப்படுகின்றதோ அவ்வாறு http://g.ho.st/ என்னும் இணையத்தளத்தில் இணையக்கணணி என்று அழைக்கப்படக்கூடிய விதத்திலே இவ் இணையத்தளமானது உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த இணையக்கணணி தளத்திலே 15GB கொள்ளளவுடைய G.ho.st Drive என்னும் சேமிப்பகம் வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் 10GB கொள்ளளவுடைய மின்னஞ்சல் ஒன்றும் தருகின்றது. அத்துடன் ஆவணங்களை,தரவுகளை உருவாக்கக்கூடிய விதத்திலே Zoho Editor,Zoho sheets போன்ற மென்பொருட்கள் காணப்படுகின்றன. கணணித்தகவல்களை நிர்வகிக்ககூடிய விதத்திலே கட்டுபாட்டு தளம் (Control panel) போன்ற பல பகுதிகளும் காணப்படுகின்றன. கணணி ஒன்றுக்கு தேவையான அடிப்படை மென்பொருட்கள் பலவும் இதில் காணப்படுகின்றன. அத்துடன் மேலும் பல வசதிகளும் இதில் காணப்படுகின்றன. இது ஒரு முற்று முழுதான இலவசமான தளம் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கதொரு சிறப்பான அம்சமாகும்.












வானத்தை முட்டும் உலகின் மிக உயரமான கட்டிடம் துபாயில்

வானத்தை முத்தமிடும் துபாயின் புர்ஜ் கட்டிடம் உலகத்தின் மிக உயரமான கட்டிடம் என்ற பெருமையை பெற்றுள்ளது.


இந்த கட்டிடம் 160 நிலைகளை கொண்டு 818 மீட்டர் உயரமுள்ளது.
இதன் உயரத்தை சொல்ல வேண்டுமானால் கிட்டத்தட்ட 1 கி.மீ KM
இந்த கட்டிடம் கட்டி முடிக்க மொத்தம் 2 பில்லியன் டாலர்
செலவாகியுள்ளது. இதன் பராமரிப்பு தூய்மைபடுத்த ஆஸ்திரேலியாவில்
இருந்து 8 மில்லியன் டாலர் செலவில் கிளினிங் சிஸ்டம் ஒன்று
உருவாக்கப்பட்டுள்ளது. இந்த மாதம் கடந்த 4 -ம் தேதி முதல் இது
பொதுமக்கள் பார்க்க அனுமதிக்கப்பட்டுள்ளது





இதைப் பற்றிய சில சுவாரஸ்சியமான தகவல்கள்:

* புர்ஜ் என்றால் டவர் இன் அரபு ( Tower in Arab) என்று பொருள்.

* இதன் தட்பவெட்பம் கட்டிடத்தின் கீழே இருப்பதை விட கட்டிடத்தின்
உச்சியில் 10 டிகிரி செண்டிகிரேட் குளிர்ந்து இருக்கும்.

* இந்த கட்டிடம் 500 ஏக்கர்-ல் அமைந்துள்ளது.

* 12 ஆயிரம் வேலையாட்கள் 100 நாடுகளில் இருந்து வந்து கட்டிடம்
கட்டும் பணி செய்துள்ளனர்.

* 22 மில்லியன் மனிதனின் உழைக்கும் நேரம் இந்த வேலை முடிக்க
பயன்படுத்தப்பட்டிருக்கிறது.

* மார்ச் 2005 ஆம் ஆண்டு தொடங்கிய இந்த பிராஜெக்ட் முடிய
5 வருடம் எடுத்துக் கொண்டுள்ளது.


--

சந்திரனில் பெருமளவில் தண்ணீர் நாசா விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு

சந்திரனில் பெருமளவில் தண்ணீர் உண்டு என அமெரிக்காவின் "நாசா" விண்வெளி ஆராய்ச்சி நிறுவன விஞ்ஞா னிகள் கண்டுபிடித்துள்ளனர்.



சந்திரனைப் பற்றி ஆராய்ச்சி செய்வ தற்காக இந்தியாவிலிருந்து "சந்திரயான் 1" செயற்கைக்கோள் அனுப்பி வைக்கப்பட்டது. அது அனுப்பிய தகவல்கள் மூலமாக அங்கு தண்ணீர் இருப்பது தெரியவந்தது.

சந்திரனின் மேற்பரப்பு முழுவதும் நீர் இருப்பதற்கான ஆதாரங்கள் உள்ளன என இந்திய விண்வெளி ஆராய்ச்சிமைய (இஸ்ரோ) விஞ்ஞானிகளும் கடந்த மாதம் தெரிவித்திருந்தனர். "சந்திரயான் 1" செய்கைக்கோளில் அமெரிக்காவின் "நாசா" சார்பில் "சந்திர யான் கனிமவள கண்டுபிடிப்பான்" கருவி ஒன்றும் அனுப்பி வைக்கப்பட்டது. அந்தக் கருவி அனுப்பிய கதிர்வீச்சின் எதிரொலி மூலமாக, "சந்திரனில் தண்ணீர் இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் (ஹைட்றஜன் மற்றும் ஒக்சிஜன் மூலக்கூறுகள்) உள்ளமை" தெரியவந்துள்ளது.

இந்தச் சூழ்நிலையில், சந்திரனை ஆய்வு செய்வதற்காக அமெரிக்காவிலிருந்து "லெக்ராஸ்" என்ற செயற்கைக்கோள் அனுப்பிவைக்கப்பட்டது. அதில் இணைக்கப்பட்டிருந்த "சென்டவுர்" என்ற ரொக்கெட்டை சந்திரனின் தென் துருவத்தில் மோதச்செய்தனர். கடந்த ஒக்டோபர் 9 ஆம் திகதி இது நடந்தது. அப்போது, சந்திரனின் மேற்பரப்பில் 20 முதல் 30 மீற்றர் ஆழத்துக்குப் பள்ளம் ஏற்பட்டது.

அந்தப் பள்ளத்தில் இருந்து ஏராளமான பனிக்கட்டிகள் சிதறி வெளியேறின. அவற்றின் அளவு 100 கிலோவுக்கு மேல் இருக்கும். அவற்றை அமெரிக்க விஞ்ஞா னிகள் ஆய்வு செய்தனர். அப்போது சந் திரனின் மேற்பரப்பில் போதுமான அளவுக்குத் தண்ணீர் இருப்பது தெரியவந்துள்ளது. இந்த ஆராய்ச்சிக்காக ரூபா ஆயிரத்து 185 கோடி செலவிடப்பட்டுள்ளது.

"லெக்ராஸ்" திட்டத்தின் இயக்குநரும் விஞ்ஞானியுமான அந்தோனி கோல பிரட்டி கலிபோர்னியாவில் சனிக்கிழமை இது தொடர்பாகப் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியவை வருமாறு:
"சந்திரனின் மேற்பரப்பு வறட்சியா னது என்றும் அங்கு தண்ணீர் இருக்க வாய்ப்பில்லை என்றும் கோடிக்கணக்கான ஆண்டுகளாக நம்பப்பட்டு வந்தது. ஆனால், சந்திரனில் நீர் இருப்பதைக் கண்டுபிடித்திருக்கிறோம். அதுவும் சிறிதளவு அல்ல. மிகப் பெரிய அளவில் அங்கு தண்ணீர் இருக்கிறது.
"ரொக்கெட் மோதியதால் ஏற்பட்ட 20 முதல் 30 மீற்றர் ஆழப்பள்ளத்திலிருந்து தண்ணீர் கிடைத்துள்ளது. இது ஆரம்ப கட்டப் பரிசோதனையின் முடிவாகும். சந்திரனின் தென் துருவத்தின் அருகே நிரந்தரமாகவே ஒரு கற்றையான அடையாளம் தெரிகிறது. அது தண்ணீராகத்தான் இருக்கும்.
"ரொக்கெட் மோதிய இடத்தில் கோடிக்கணக்கான ஆண்டுகளாக சூரிய ஒளிபடவில்லை. சந்திரனில் தண்ணீர் இருப்பது, மேலும் பல ஆராய்ச்சிகளுக்கு வழி அமைத்துக் கொடுக்கும்.'' இவ்வாறு விஞ்ஞானி அந்தோனி தெரிவித்துள்ளார்.

பறக்கும் கார் 2011 இல் அறிமுகம்


வீதியில் ஓடும், ஆகாயத்திலும் பறக்கும் வகையிலான கார் ஒன்றை, உலகிலேயே முதல் முறையாக அமெரிக்க நிறுவனம் தயாரித்து வருகின்றது.



ஒரு கோடி ரூபா விலை கொண்ட இந்த கார், 2011 ஆம் ஆண்டு முதல் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்காவைச் சேர்ந்த டெராப்யூஜி யாஸ் என்னும் நிறுவனம்,பறக்கும் காரைத் தயாரிக்கவுள்ளது.

இறக்கைகளுடன் தயாரிக்கப்படும் இந்தக் கார், வீதியில் செல்லும் போது சக்கரங்களையும், பறக்கும் போது மடிக்கப்பட்ட இறக்கைகளை விரித்துக் கொண்டும் செல்லும். அதிக கனமில்லாமல், எளிதில் இயங்கக் கூடிய விளையாட்டு விமானம் போன்று காணப்படும் இந்த விமானக் காரை, பயிற்சி பெற்ற யார் வேண்டுமானாலும் ஓட்டலாம். இரண்டு பேர் பயணம் செய்யலாம். புறப்படும் இடத்தில் இருந்து வீதி வழியாக விமான நிலையம் வரை காராகச் செல்லும் இந்த வாகனம், விமான நிலையத்தில் இருந்து விமானம் போன்று விண்ணில் பறந்து செல்லும். விமான நிலைய கட்டுப்பாட்டில் மற்ற விமானங்கள் இயங்குவது போலவே, இந்த கார் விமானமும் இயங்கும். இந்த காரில் பலவித நன்மைகள் உள்ளன.

வீட்டில் இருந்து விமான நிலையத்திற்குச் சென்ற பின், அங்கு இந்த வாகனத்தை, "பார்க்கிங்'' ஏரியாவில் நிறுத்த வேண்டிய அவசியம் இல்லை. பறந்துசெல்லும் போது மோசமான வானிலை, புயல்க் காற்று போன்ற இடர்பாடுகள் ஏற்பட்டால், குறைந்த கால இடைவெளியில் வீதியில் இறங்கி விட லாம் வீதியில் கார் சென்று கொண்டிருக்கும் போது, தேவைப்பட்டால் 30 வினாடிக்குள் பறக்கும் தன்மைக்கு மாறும். அரசிடம் முறையாக அனுமதி பெற்று விற்பனை செய்ய, கார் தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்துள்ளது. பறக்கும் காரின் மாதிரி, தற்போது அனுமதிக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் வெள்ளோட்டம் விடப்படும் இந்த நவீன கார்,மிக விரைவில் சர்வதேச அளவில் அதிக வரவேற்பை பெறும் என்று எதிர் பார்க்கப்படுகின்றது. இந்த காரின் விலை, 95 லட்சம் ரூபா. வரும் 2011 ஆம் ஆண்டு அதிகாரப்பூர்வமாக விற்பனைக்கு வரும் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.