நாம் சில வேளைகளில் தவறுதலாக சில கோப்புகளை அழித்து விட்டு திரும்பப் பெற முடியாமல் தவிப்பதுண்டு.
வெறும் delete மட்டும் அழுத்தி இருந்தால் எளிதாக மறுபயன்பாட்டு பெட்டியில் இருந்து பெற்றுக் கொள்ளலாம். ஆனால் SHIFT+DELETE அழுத்தி இருந்தால் மீண்டும் பெறுவது கடினம்.
இதற்கு பல்வேறு மென்பொருள்கள் பல காலமாக கிடைக்கப்பெறுகிறது.
அவற்றுள் மிக எளிமையான ஒன்று தான் இந்த "Undelete Plus"
மென்பொருளை தரவிறக்க இந்த இணைப்பை click பண்ணவும்
http://people.ee.ethz.ch/~mhotz/files/programs/undelete_plus%202.71.exe
இதன் சிறப்பு என்னவென்றால் நீங்கள் இதனை உங்கள் கணினியில் நிறுவ வேண்டியது இல்லை. எடுத்துசெல்லத்தக்க (Portable) வகையில் இம்மென்பொருள் அமைந்துள்ளது.
1.மென்பொருளை திறந்ததும் C:/ தெரிவு செய்யப்பட்டிருக்கும் அதை நீக்கி, உங்களுக்கு தேவையான டிரைவை குறிக்கவும். பின் Start Scan ஐ சொடுக்க உங்கள் பணி தொடங்கப்பெறும்.
2.உங்கள் அழிந்து போன கோப்புகள் அனைத்தும் பட்டியலிடப்படும். அனைத்து வகை கோப்புகளும் தனித் தனியே காண்பிக்கப்படும். தேவையான கோப்புகளை தெரிவு செய்து Start Undelete கொடுங்கள்.
3.இவ்வழியில் உங்கள் கோப்பை கண்டுபிடிப்பது கடினம் எனில்,
பின்வருமாறு தக்க மாற்றங்களுடன் முயற்சித்து பார்க்கலாம்.
இதன் சிறப்பு என்னவென்றால் நீங்கள் இதனை உங்கள் கணினியில் நிறுவ வேண்டியது இல்லை. எடுத்துசெல்லத்தக்க (Portable) வகையில் இம்மென்பொருள் அமைந்துள்ளது.
இதன் பயன்பாடு குறித்து எளிதாக விளக்க முற்பட்டுள்ளேன். பிழைகள் இருப்பினோ அல்லது ஐயம் உண்டானலோதெரியப் படுத்தவும்
1.மென்பொருளை திறந்ததும் C:/ தெரிவு செய்யப்பட்டிருக்கும் அதை நீக்கி, உங்களுக்கு தேவையான டிரைவை குறிக்கவும். பின் Start Scan ஐ சொடுக்க உங்கள் பணி தொடங்கப்பெறும்.
2.உங்கள் அழிந்து போன கோப்புகள் அனைத்தும் பட்டியலிடப்படும். அனைத்து வகை கோப்புகளும் தனித் தனியே காண்பிக்கப்படும். தேவையான கோப்புகளை தெரிவு செய்து Start Undelete கொடுங்கள்.
3.இவ்வழியில் உங்கள் கோப்பை கண்டுபிடிப்பது கடினம் எனில்,
பின்வருமாறு தக்க மாற்றங்களுடன் முயற்சித்து பார்க்கலாம்.
4. டாகுமென்ட் கோப்புகளை மட்டும் தேட விரும்பினால் *.docx என முதல் பேட்டியில் நிரப்பி தேடலாம். அல்லது draftcopy என்று அதன் பெயர் இருக்குமேயானால் அதனை உள்ளிட்டும் தேடலாம்.
5.மாற்றி அமைக்கப்பட்ட அல்லது உருவாக்கப்பட்ட திகதியை கொண்டும் தேடலாம். குறைந்தபட்ச கோப்பு அளவு நிர்ணயித்து தேடும் வசதியும் காணப் பெறுகிறது (Ex. 100KB).
குறிப்பு : நீங்கள் எந்த டிரைவின் கோப்புகளை திரும்பப் பெற வேண்டுமோ அங்கு இந்த மென்பொருளை பிரதி எடுத்து பயன்படுத்தினால் முடிவுகள் வேகமாக கிடைக்கும்.
-என்றென்றும்
உங்கள் அன்பின்
கணா-
No comments:
Post a Comment