Wednesday, April 7, 2010

பாராளுமன்றத் தேர்தல் 2010

அடுத்த எனது சன் டிவி சர்ச்சை பற்றிய எனது  அலசலுக்கு முதல்!!!!

இப்போது இலங்கையில் எல்லோரும் எதிர்பார்க்கும் ஒரு விடயம் இந்தப்
 பாராளுமன்றத் தேர்தல் 2010.

தேர்தல் வேட்புமனு தாக்கல் செய்தது முதல் ஆரம்பித்த பிரச்சாரம் இன்றையளவில் ஓய்ந்திருக்கும் இந்த வேளையிலே
அடுத்த கட்டம் என்ன?????

பொன்னான உங்கள் வாக்குகள் யாருக்கு என்பதுதான் ??
யார் ஆட்சியை கைப் பற்றப் போகிறார்கள்??
யார் உங்களது  பிரதேசத்தில் தெரிவாகப் போகிறார்கள் ??

 !!!!!!!!!!!!!!

இவைதான் கேள்விகள் ---  விடைகள் ?
உங்கள் கைகளிலேயே உள்ளன....
வாக்களிக்க முன் சில விடயங்களை சிந்தியுங்கள்
சிந்திக்க பல விடயங்கள் உள்ளன

அதற்காகவே இந்த இடைவேளை உங்களுக்கு!!!

இதுவரை காலமும் நடந்தது என்ன?
யாருக்கு வாகளித்தீர்கள் ?
யாருக்கு மாலை இட்டீர்கள் ?
இதுவரை நாட்டில் நடந்தது என்ன?
உங்கள் வீட்டில் நடந்தது என்ன?

ஆனால் ஒன்று நீங்கள் இப்போது இன்னும் சங்கடமான நிலையில்
ஏனென்றால்
இதுவரை நாட்டில்  நடந்ததற்கும்
இப்போது நடப்பதற்கும் இனி நடக்கப் போவதற்கும்
நிறையவே வேறுபாடு உள்ளது

இந்த மூன்று காலத்திலும் (இறந்த, நிகழ், எதிர் காலங்கள்)  இலங்கையில் இருந்த இருக்கின்ற இருக்கப் போகின்ற யுத்த அரசியல் பொருளாதார ஜனநாயக மற்றும் பல்துறை சார்ந்த நிலைமைகளே இதற்கு காரணம்.
அன்று இருந்த நிலைமை வேறு இன்று வேறு !


நாட்டில் ஜனநாயகம் உள்ளது ஜனநாயக ஆட்சி நிலவுகின்றது என்று சொல்லப்படும்  காலம் இது !


 
நாட்டில் இதுவரை இருந்த ஆட்சியாளர்கள் மற்றும் அரசாங்கங்களுக்கு  பழக்கப் பட்ட விடயம் யுத்தம்! அதை வைத்து அவர்களின் சம்பாத்தியம் ஓடியது
இப்போது  உள்ள நிலைமைக்கு அவர்கள் சரிப்படுவார்களா?
அவர்களது போக்கு கடந்த காலத்தில் எவ்வாறு இருந்தது ?
நாட்டை நல்லின  ஒருமைப் பாட்டை அவர்களால் கட்டி எழுப்ப முடியுமா?
அல்லது இருக்கும் நிலைமையும் இல்லாமல் போகுமா?
சிந்தியுங்கள் !!!!!!!!!!


 
தேர்தல் காலங்களில் அளிக்கப்படும் வாக்குறுதி என்ன?
நீங்கள் வாக்களித்து அனுப்பியவர்கள் நாடாளுமன்றில் உங்களுக்காக ஒருமுறையேனும் வாய் திறந்தார்களா?
உங்களிடம் கூறிய உறுதி மொழிகளில் ஒன்றையேனும் பெற்றுத் தந்தார்களா?

உணர்ச்சி வசப்பட்டு உரக்க குரல் கொடுத்து பின் ஊர் விட்டு ஓடி இல்லையேல் உலகம் சுற்றி உல்லாசம் அனுபவித்து மீண்டும் ஊர் வந்து ஓட்டு கேட்கும் வேட்பாளர்கள் .

இருக்கிறதோ இல்லையோ எதோ ஒரு கட்சி மக்களுக்கு எம்மால் இயன்ற சேவை என்று நிற்கும் வேட்பாளர்கள்.

பரம்பரை வழி வந்த ஓட்டு எங்க போகப் போகுது எண்டு வேட்பு மனுத் தாக்கல் செய்த வேட்பாளர்கள் .

பல இடங்களில் வெட்கித் தலை குனிந்து அரசியலில் இது  எல்லாம் சகஜம் என்று ஆரவாரித்து மீண்டும் களம் இறங்கும் வேட்பாளர்கள் .

கட்சியே வேண்டாம் என்று களம் இறங்கும் வேட்பாளர்கள்.

ஒண்டோ இரண்டோ  மக்கள் வாக்கு எனக்கு இப்போ எப்படி? இல்லாட்டி இனி வரும் காலத்தில் பார்ப்போம் என்றெண்ணி வாக்காளரிடம் அறிமுகமாகும் வேட்பாளர்கள்.

நமது தொழிலை நாம தான் கவனிக்கணும் பிரபலம் ஆகணும் பெரிய ஆட்களுடன் போட்டோ எடுக்கணும் விளம்பரமாகனும் என்றெண்ணி விளம்பரத்தில் இறங்கியுள்ள வேட்பாளர்கள்.

பெரும்பான்மை வாக்கு கிடைக்கக் கூடாது என்று குறிப்பிட்ட நபரின் அல்லது கட்சியின் வாக்கை சிதற வைக்க களம் இறக்கப்பட்டுள்ள வேட்பாளர்கள்.



இவ்வாறுள்ள பல ரகமான வேட்பாளர்கள் மத்தியில் உங்கள் வாக்கு யாருக்கு ??

இப்போதே சிந்தியுங்கள்!!!!

தேர்தல் வாக்குறுதிகள் விஞ்ஞாபனங்கள் வெளியிட்டு அது பற்றி கார சாரமான விவாதங்கள் மற்றும் விளக்க உரைகளும் முடிந்திருக்கு இந்த வேளையில் சிந்தியுங்கள் !!!

அவர்களின் வாக்குறுதிகள் விஞ்ஞாபனங்கள் இதுவரை ஏற்கனவே சொல்லப்பட்டவாறு நடந்ததா?

நடைமுறை நாட்டின் அரசியல் பொருளாதார நிலைமைகளுடன் ஒத்து வருமா?

ஒருமுறை சிந்தியுங்கள் !

பின்பு வாக்களியுங்கள் !

இல்லையேல் வருத்தப்படுவது நான் மட்டுமன்றி நீங்களும் தான் !!

நீங்கள் வருத்தப் படுவதை நான் விரும்பவில்லை.
என்றும் -- கணா --