மொபைல் போன்களில் அதிக சிரமம் தருவது, அதன் பேட்டரியை சார்ஜ் செய்வதுதான். எந்த போனாக இருந்தாலும், குறிப்பிட்ட சில நாட்களுக்கு மட்டுமே, அதன் Battery பேசுவதற்கு திறன் கொடுக்கும்.
இப்போது Multimedia இயக்கம், இன்டர்நெட் பிரவுசிங் போன்ற வேலைகள் பேட்டரியின் திறனை அதிகம் எடுத்துக் கொள்வதால், Battery charge செய்திடும் சிக்கல் இன்னும் அதிகமாகின்றன.
அமெரிக்க வல்லுநர்கள் இதற்கான ஒரு அதிசயமான தீர்வை நோக்கி தங்கள் ஆராய்ச்சியினைத் தொடங்கி உள்ளனர். ஒலி அலைகளை மின்சக்தியாக மாற்றும் ஆய்வை மேற்கொண்டுள்ளனர்.
காலமைன் லோஷனில் உள்ள ஸிங்க் oxide கொண்டு Nano Wire field உருவாக்கி, அதனை இரண்டு electrode அமைத்து, ஒலி அலைகள் மூலம் அவற்றை நெருக்கிய போது 50 மில்லி வோல்ட் மின்சக்தி உருவாகி இருந்துள்ளது.
எப்படி எலக்ட்ரிக் சிக்னல்கள், ஸ்பீக்கர்களில் ஒலியாக வெளியேறுகிறதோ, அதே போல எதிர்வழியில், சரியான வேதியியல் பொருட்களைப் பயன்படுத்தி, ஒலி அலைகளை மின் அலைகளாகவும் மாற்றலாம்.
இதன் மூலம் மொபைல் போன்களில் பேசப்பேச, அந்த ஒலி அலைகளையே பயன்படுத்தி, அதில் உள்ள பேட்டரியை சார்ஜ் செய்திடலாம் என்று இந்த விஞ்ஞானிகள் முயற்சிக்கின்றனர்.
அதெல்லாம் சரி அப்பா ஓவரா சாச் ஏறினால்???
இனி நம்ம பேச்சுப் பீரங்கிகளுக்கு வாழ்க்கை தான்.
உங்கள் battery யும் சார்ஜ் பண்ண அவர்களை நாட வேண்டி வரும்..
-அன்புடன்
-கணா-