Monday, May 10, 2010

அம்மா


அனைத்து அன்னையருக்கும் அடியேனின் அன்பு  கலந்த
அன்னையர் தின வாழ்த்துக்கள் 

அம்மா!
அம்மா என்பது  பாசையின்
அழியாத செல்வம்
அந்தரத்தில்  உச்சரிக்கும்
அமிர்த வார்த்தை

அன்பு என்ற ஆலயத்தின்
அர்ச்சனை மந்திரம்
அறிவை ஊட்டும்
அகராதி ஊற்று

அல்லல் தீண்டினும்
அனுசரிக்கும் ஆத்மா
அகிலம் போற்றும்
அதிசய அவதாரம்.



அனைத்து அன்னையருக்கும் அன்னையர் தின வாழ்த்துக்கள்

என்னையும்  பெற்று பாலூட்டி சீராட்டி
பாசமழையில் குளிப்பாட்டி வளர்த்து நாளும் நலமுடன் வாழ வைத்த, வைத்துக்கொண்டிருக்கும்
என் அம்மாவுக்கு எனது அன்னையர் தின வாழ்த்துக்கள்...
இது என் அம்மாவுக்காக
அன்புடன்
- கணா -