
கணிதம் என்பது இலவுவாகக் கற்கக் கூடியது. எனினும் இற்றை வரைக்கும் கணித பாடம் மாணவர்கள் மத்தியில் கசப்பான பாடமாகவே இருந்து வருகிறது.ஆனாலும் இன்றைய காலத்தில் கணிதத்தைக் கற்பதற்கு கட்டாய தேவை அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதை மாணவர்கள் மத்தியில் அபிப்பிராயமான பாடமாகக் கற்பிக்க கணித பாட ஆசிரியர்கள் மிகவும் பிரயத்தனம் செய்துவருகின்றனர். அதற்காக ஆசிரியர்கள் செய்யக்கூடிய இன்னொரு வழியாகவும் இதை எடுத்துக் கொள்ளலாம்.
மாணவர்களுக்கு கணிதத்தில் ஆர்வத்தை அதிகரிக்க இவ்வாறான கணித உத்திகளை ஆசிரியர்கள் மாணவர்களுக்கு சொல்லிக் கொடுக்கலாம்.
இங்கே நான் ஐந்தில் முடிவுறும் எண்களை இலகுவாக வர்க்கிக்க வழி ஒன்று சொல்லுகிறேன்.
உதாரணமாக
35 இன் வர்க்கத்தை எடுத்துக் கொள்வோம் எடுத்துக் கொள்வோம்
இறுதியில் உள்ள 5 ஐக் கவனிக்காது விடுக்க
இறுதி எண் 5 தவிர்ந்த எண் இங்கு 3 .
3 ஐ எண்கள் வரிசையில் அதற்கு அடுத்த எண் 4 ஆல் பெருக்க வேண்டும்
வருவது 12
அத்துடன் 25 ஐ சேர்த்து விடுக.வேலை முடிந்தது
விடை 12 25 = 1225
இன்னும் இருக்கின்றது..தொடர்ந்தது தொடர்பில் இருங்கள்
என்றென்றும்
உங்கள் அன்பின்,
-கணா-
No comments:
Post a Comment