Sunday, November 28, 2010

தடை செய்யப் பட்ட இணையத் தளங்களில் நாம் எமது கை வரிசையைக் காட்ட.

குறிப்பு;- நண்பர்களே / நண்பிகளே!!!
நீங்கள் மாட்டினால் நான் பொறுப்பில்லை.!

நாம் அதிகம் இணையதளம் பாவிக்கும் இடங்களான அலுவலகம், பாடசாலை, பல்கலைக்கழகம் என்பவற்றில் பல எமக்கு பிடித்த இணையதளங்கள் குறிப்பாக Facebook .com, blogspot .com என்பன Network Administrator ஆல் தடை செய்யப் பட்டிருக்கும். இந்த கட்டுப்பாடுகளை உடைத்து எப்படி உங்களுக்கு பிடித்த தடைசெய்யப்பட்ட தளங்களுக்கு செலவது என்பதற்கான 07 முறைகள். இவற்றில் சில சமயம் குறிப்பிட்ட ஒரு முறை பயனளிக்காத பட்சத்தில் மற்றைய முறையை கையாளலாம்.

குறிப்பு :- இந்த முறைகளை தடை செய்யப்பட்ட சட்டவிரோத இணைய தளங்களுக்கு செல்வதற்கு பயன்படுத்தல் வேண்டாம் .

1 .URL இக்கு பதிலாக IP address ஐ பயன்படுத்தல்

ஒவ்வொரு இணையதளமும் தனது URL அதாவது Domain name இற்கு சமமான IP address ஐ கொண்டிருக்கும். உதாரணமாக facebook http://www.facebook.com என்ற URL இற்கு சமமாக 69.63.189.11 என்ற IP address ஐ கொண்டுள்ளது.இது போல் உங்களுக்கு தேவையான மற்ற இணைய தளங்களின் IP address ஐ கண்டு பிடிக்க http://www.ip-adress.com/reverse_ip என்ற தளம் பயனுள்ளதாக இருக்கும்.



2 .Google Cache ஐ பயன்படுத்தல்

நீங்கள் Google போன்ற search engines களை பயன்படுத்தி குறித்த இணையதளத்தை தேடும் பொது தேடல் முடிவுகள் கிடைக்கும்.அந்த குறிப்பிட உங்களுக்கு தேவையான search result இன் கீழ் பார்த்தீர்கள் என்றால் "Cache " என்ற ஒரு சொல் (லிங்க்) இருக்கும் அதனை நீங்கள் அழுத்தும் பொது உங்களுக்கு தேவையான குறித்த தடை செய்யப்பட்ட இணைய தளத்துக்கு செல்ல முடியும்.



3 .e -mail இல் பெறுதல்


web2mail என்ற ஒரு இலவச சேவை வழங்கும் தளம் ஒன்று உள்ளது. நீங்கள் இந்த தளத்தின் மின்னஞ்சல் முகவரியான www@web2mail.com இக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்ப வேண்டும் subject title ஆக உங்களுக்கு தேவையான தளத்தின் URLஐ இட்டு.இது நீங்கள் அனுப்பிய தள முகவரியின் web page இனை உங்கள் மினஞ்சல் Inbox இற் கு அனுப்பி வைக்கும்.



4 .Proxy Websites இனை பயன்படுத்தல்

இது தான் பலரால் பயன்படுத்தப்படும் பிரபல முறை.இப்படியான தளங்கள் ஆயிரக்கணக்கில் உள்ளன.இத்தளங்களுக்கு சென்று தடை செய்யப்பட்ட உங்களுக்கு வேண்டிய இணையதள முகவரியை கொடுத்தால் குறித்த தளத்துக்கு செல்ல கூடியதாக இருக்கும். மிக பிரபலமான இப்படியான சேவை வழங்கும் ஒரு தளம் http://www.hidemyass.com ஆகும்.



5 .Short URL முறையை கையாளல்

பெரிய URL களை சுருக்கி தரும் சேவையை வழங்கும் சில தளங்கள் உள்ளன. இப்படியான ஒரு தளத்துக்கு சென்று உங்களுக்கு தேவையான முகவரியை வழங்கி சுருக்கப்பட்ட முகவரியை பெற்று அதற்கு செல்வதன் மூலம் தடை செய்யப்பட்ட தளத்துக்கு செல்ல முடியும்.இப்படியான URL சுருக்கல் சேவை வழங்கும் பிரபல தளம் http://bit.ly இனை நீங்கள் பாவிக்கலாம்.



6 .Screen-Resolution.com

இந்த தளம் different resolution இல் உள்ள எந்த தளத்தையும் பார்வையிட உதவு கின்றது. அதுமட்டுமல்லாமல் மிகவும் சுவாரசியமான பயனுள்ள ஒரு தளம். இங்கு சென்றால் தடை செய்யப்பட்ட இணையதளங்களுக்கு நீங்கள் செல்ல உதவும்.


7 .Google Mobile Search

http://www.google.com/gwt/n என்ற இந்த தளம் குறித்த ஒரு இணைய தளத்தை செல் போன் இல் பார்த்தால் எப்படி இருக்கும் என பார்க்க உதவும் ஒரு தளமாகும்.

பேராதனை பல்கலை நண்பர்களுக்கு ;

நான் இதை IT cetre இல் try பண்ணி பார்த்துள்ளேன்
நீங்கள் cc இலும் try பண்ணி பாருங்கள் .
மாட்டினால் சங்குதான்
அதல try பண்ணுறதோட நிறுத்திக் கொள்ளுங்கள்.

அது மட்டுமல்ல்ல,
உங்களது facebook கணக்கை ஏதாவது அனுபதிக்கப்படாத proxy தளங்களினூடு open பான்னினால் அல்லது பண்ண முயன்றால் நீங்கள் பின்பு சாதாரணமாக open பண்ணும் பொது பல security வினாக்களுக்கு முகம் கொடுக்க வேண்டி வரும்.


-அன்புடன்-
-கணா-

Wednesday, November 24, 2010

கதைப்பதன் மூலம் , உங்கள் மொபைலுக்கு சார்ஜ் ஏற்ற முடியும் ..



மொபைல் போன்களில் அதிக சிரமம் தருவது, அதன் பேட்டரியை சார்ஜ் செய்வதுதான். எந்த போனாக இருந்தாலும், குறிப்பிட்ட சில நாட்களுக்கு மட்டுமே, அதன் Battery பேசுவதற்கு திறன் கொடுக்கும்.


இப்போது Multimedia இயக்கம், இன்டர்நெட் பிரவுசிங் போன்ற வேலைகள் பேட்டரியின் திறனை அதிகம் எடுத்துக் கொள்வதால், Battery charge செய்திடும் சிக்கல் இன்னும் அதிகமாகின்றன.


அமெரிக்க வல்லுநர்கள் இதற்கான ஒரு அதிசயமான தீர்வை நோக்கி தங்கள் ஆராய்ச்சியினைத் தொடங்கி உள்ளனர். ஒலி அலைகளை மின்சக்தியாக மாற்றும் ஆய்வை மேற்கொண்டுள்ளனர்.


காலமைன் லோஷனில் உள்ள ஸிங்க் oxide கொண்டு Nano Wire field உருவாக்கி, அதனை இரண்டு electrode  அமைத்து, ஒலி அலைகள் மூலம் அவற்றை நெருக்கிய போது 50 மில்லி வோல்ட் மின்சக்தி உருவாகி இருந்துள்ளது.

எப்படி எலக்ட்ரிக் சிக்னல்கள், ஸ்பீக்கர்களில் ஒலியாக வெளியேறுகிறதோ, அதே போல எதிர்வழியில், சரியான வேதியியல் பொருட்களைப் பயன்படுத்தி, ஒலி அலைகளை மின் அலைகளாகவும் மாற்றலாம்.


இதன் மூலம் மொபைல் போன்களில் பேசப்பேச, அந்த ஒலி அலைகளையே பயன்படுத்தி, அதில் உள்ள பேட்டரியை சார்ஜ் செய்திடலாம் என்று இந்த விஞ்ஞானிகள் முயற்சிக்கின்றனர்.

அதெல்லாம் சரி அப்பா ஓவரா சாச் ஏறினால்???

இனி நம்ம பேச்சுப் பீரங்கிகளுக்கு வாழ்க்கை தான்.
உங்கள் battery   யும் சார்ஜ் பண்ண அவர்களை நாட வேண்டி வரும்..

-அன்புடன்
-கணா-

Tuesday, November 16, 2010

facebook பாவிக்கப் படியுங்கள்


எல்லோருக்கும் எனது
 
வணக்கங்கள்
இன்றைய நாட்களில் பலர் மத்தியிலும் பிரபல்யம் பெற்ற facebook பல பிரச்சனைகளுக்கு காரணமாக பல நாடுகளில் இருந்துள்ளது என்று என்றோ கேள்விப் பட்டு இருக்கிறோம்.

ஆனாலும் இன்று அந்தப் பிரச்சனை இலங்கைக்கு வந்துள்ளது.
facebook இனால் இற்றைக்கு 50 வரையிலான புகார்கள் இலங்கைப் போலீஸ் நிலையங்களில் பதிவு செய்யப் பட்டு இருப்பதாக பத்திரிக்கை கட்டுரை ஒன்று சொல்லுகிறது.

அதை விட அண்மையில் யாழ்ப் பானத்தில் நடைபெற்ற சில சம்பவங்களும் நீங்கள் கேள்விப் பட்டு இருப்பீர்கள் .

அதைவிட பல பிரச்சனைகளை நானும் பார்த்தும், நெருங்கிய நண்பர்கள் மூலம் கேட்டும் இருக்கிறேன்
இதற்கான காரணத்தை நோக்க வேண்டிய நேரம் வந்துள்ளது.
இதனால் அதிகம் பாதிக்கப் படுவது பெண்கள் ஆக இருந்தாலும் ஆண்களும் கூட மிக கவனமாக இருக்க வேண்டிய நிலைமையை வெளி நாடுகளில் இடம் பெற்ற சில சம்பவங்கள் மூலம் அறியக் கூடியதாக உள்ளது.

facebook என்பது ஒரு சமூக வலையமைப்பு ஆக இருப்பதனால் பலருக்கு உண்மையில் பிரயோசனமானதாக இருப்பதை இல்லை என்று சொல்ல முடியாது.


ஆனாலும் இணையங்களுடன் தொடர்பு வைத்திருப்பவர்கள் எதையும் எப்பவும் ஆராய்ந்ததும் பின்விளைவுகளை யோசித்தும் உருவாக்கியதை கட்டுப் படுத்தத் தெரிந்துமே இணையத்தில் எவ் வேலைகளையும் செய்ய வேண்டும்.

ஏனெனில் இணையம் பற்றி உங்களுக்கு சொல்லத் தேவை இல்லை
அதை எப்படிக் கட்டுப் படுத்தினாலும்
எங்கு எதை தடை செய்தாலும்
அவற்றை எல்லாம் சென்று பார்க்க பல வலைத் தளங்கள் இன்றும் உருவாகிக் கொண்டுதான் இருக்கின்றன.
இதெல்லாம் ஏன்?
நீங்களே சிலவேளை அவ்வாறான இணையத்தளங்களைப் பயன் படுத்தி இருக்க கூடும் .



facebook பற்றி இன்று எழுந்திருக்கும் இந்தப் பிரச்னைக்கு பல காரணங்கள் உள்ளன
சுருக்கமாகச்சொன்னால்
முதலில் இணையம் பற்றி நன்கு அறிய வேண்டும்
பின்பு facebook பற்றி நன்கு அறிய வேண்டும்
அதன்பின்பு தான் அதில் கணக்கு ஒன்றை ஆரம்பிப் பாத்து நல்லது என்பதே நான் சொலக் கூடியது.
இன்று
எனக்குத் தெரிந்த வரையில்
பலர்
இணையம் பற்றி தெரியாது facebook கணக்கு ஆரம்பித்து உள்ளனர்.



எனது அனுபவம் ஒன்றை இங்கு தருகிறேன்...
ஒருநாள் என்னிடம் ஒரு நபர் கேட்டார்
"மச்சான் ஒரு facebook கணக்கு தொடங்க வேண்டும் எப்படி" என்று!
நான் அதற்கென்ன என்று அவரை அழைத்துக் கொண்டு சென்று mail address என்ன என்று கேட்ட போது தான் தெரியும் அவருக்கு mail address இல்லாதது மட்டுமல்ல இணையம் பற்றியோ கணணி பற்றியோ பூரண அறிவு இல்லை !.
ஆனாலும் பல காரணிகள் அவருக்கு அந்தப் facebook கணக்கை ஆரம்பிக்கத் தூண்டி இருந்தமை பின்பு எனக்குத் தெரிய வந்தது .

ok என்று மெயில் ஒன்று உருவாக்கி facebook கணக்கும் உருவாக்கிய போது அவர் என்னிடம் கேட்ட அடுத்த கேள்வி
"எப்படி போட்டோ போடுவது "
நான் கேட்டேன் "ஏன்" என்று
இல்லை சும்மா போடலாம் தானே என்றார்.



உண்மையில் பிரச்சனை இங்குதான் எழுகிறது
facebook பாவிக்கும் போது கணக்கு ஆரம்பிக்கத் தொடங்குவது முதல் நாம் அங்கு கேட்கும் கேள்விகளுக்கு ஒழுங்காக விடை அளிக்க வேண்டும்
மிக முக்கியமாக கணக்கு ஆரம்பிக்க முதல் facebook Account setting பற்றி ஒழுங்காக தெரிந்து வைத்திருக்க வேண்டும்.
உண்மையான தகவல்களை வெளியிடுவது
புகைப் படங்களை வெளியிடுவது
நண்பர்களை இணைப்பது
chat பண்ணுவது பற்றி மிகவும் கவனமாக இருக்க வேண்டும்

உங்கள் விபரங்கள் புகைப் படங்கள் போன்றவற்றை யார் யாருடன் பகிர்ந்து கொள்ளப் போகிறீர்கள் பற்றி தெளிவாக setting செய்து கொண்ட பிறகே புகைப் படங்களை வெளியிட முயற்சிக்க வேண்டும்.

மொத்தத்தில் facebook பற்றி முதலில் நன்கு படிக்க வேண்டும்...
பெண்கள் மட்டுமல்ல ஆண்களும் தான் ...



-அன்புடன்
-kana-

பல்கலைக்கழக நெருக்கடியும் அரசின் அணுகுமுறையும்

பல்கலைக்கழகக் கல்வியில் மாற்றம் கொண்டுவரப்பட வேண்டியதன் அவசியம் குறித்து சமீபகாலமாக பேசப்பட்டுவருகின்றது. அவ்வாறானதொரு மாற்றம் தேவையானதுதான் என்பதை இன்று நாடு உணரத் தலைப்பட்டுள்ளது. அவ்வாறான மாற்றம் பலாத்காரமாக ஏற்படக்கூடாது. பல்கலைக்கழக சமூகத்தின் ஒத்துழைப்புடனேயே அதனைச் செய்ய வேண்டும். ஏற்படுத்தப்பட வேண்டிய மாற்றம் அதனூடாக பல்கலைக்கழக மாணவர்களுக்கும் போதனாசிரியர்கள், விரிவுரையாளர்களுக்கும் கிட்டக்கூடிய பலாபலன், நன்மைகள் பற்றி எடுத்து விளக்கப்பட வேண்டும். அதோடு நின்றுவிடாமல் பல்கலைக்கழக மாணவர் சமூகத்தின் பெற்றோர்களுக்கும் தெளிவுபடுத்தப்பட வேண்டும்.
பல்கலைக்கழக மாணவர் சமூகத்துக்கோ, பெற்றோர்களுக்கோ, பல்கலைக்கழக கல்விமான்களுக்கோ எதுவுமே தெரிவிக்கப்படாமல் இதுவிடயத்தில் அரசு தான்தோன்றித்தனமாகச் செயற்படமுனைவதால் தான் கடந்துபோன நாட்களில் விரும்பத்தகாத சம்பவங்கள் இடம்பெற்றன. அரசாங்கத்தின் தூரநோக்கற்ற செயற்பாடுகளால் அது அரசியல்மயப்படுத்தப்பட்டதோடு அதன் தாக்கம் பல்கலைக்கழக மாணவர்கள் வீதியில் இறங்கும் நிலை ஏற்பட்டது. அதுமட்டுமன்றி பல்கலைக்கழக மாணவர்கள் பலர் சிறையிலடைக்கப்படும் நிலை கூட ஏற்பட்டது. மக்களுக்குத் தெரிவிக்கப்படாத மறைமுகமாக எடுக்கப்பட்ட முடிவொன்று காரணமாக விரும்பத்தகாத சம்பவங்கள் இடம்பெற்றன.
கடந்துபோன நீண்டகாலத்தோடு ஒப்பிட்டுப்பார்க்கும் போது பல்கலைக்கழகங்கள் சாதித்த சமூகச் செயற்பாடுகள் இன்று மாற்றம் கண்டுள்ளது. அன்று 8ஆம் வகுப்பு சித்தியடைந்திருந்தால் அது பாடசாலை ஆசிரியராக வரும் தகுதியாகக் காணப்பட்டது. அன்று பல்கலைக்கழகக் கல்வி உயர்கல்விமான்களை நாட்டுக்குத் தரும் நிறுவனமாகவே காணப்பட்டது. இன்று பாடசாலை ஆசிரியராக வருவதற்கு பல்கலைக்கழகப் பட்டம் அவசியம் என்ற நிலை உருவாகியுள்ளது. எட்டாம் வகுப்புத் தகைமையிலிருந்து க.பொ.த.சாதாரண தரம், உயர்தரம் என்று வந்து படிப்படியாக மாற்றம் கண்டு ஆசிரிய பதவிக்கு பட்டதாரி தகைமை அவசியம் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. ஒரு சாதாரண தொழில்வாய்ப்பைப் பெற்றுக்கொள்வதற்கு பல்கலைக்கழகப் பட்டம் தேவைப்படுகின்றது.
இவ்வாறான நிலையில் அரசு பல்கலைக்கழகங்களுக்குத் தெரிவாகும் மாணவரின் தொகை மட்டுப்படுத்தப்பட்டதாகவே உள்ளது. நாட்டின் ஒவ்வொரு பிரஜையும் பட்டப்படிப்பைப் பெற்றுக்கொள்ள வேண்டுமென்ற ஒரு நிலை உலகளாவிய மட்டத்தில் உருவாகியிருக்கின்றது. அரச பல்கலைக்கழகங்களில் தெரிவாகும் அத்தனை மாணவர்களையும் உள்வாங்குவதற்கான வளம் கிடையாது. இதனை யாராலும் மறுத்துரைக்க முடியாது. இவ்வாறான சூழ்நிலையில் தனியார் பல்கலைக்கழகங்களின் தேவைப்பாடு முக்கியமானதொன்றாகவே காணப்படுகிறது. தனியார் பல்கலைக்கழகங்களில் உயர்கல்வியைத் தொடர விரும்புவோருக்கு வாய்ப்பளிக்க எவராலும் மறுக்க முடியாது. அரச பல்கலைக்கழகங்களில் பல்கலைக்கழக அனுமதி கிடைக்காத மாணவர்களைத் தொடர்ந்து உயர்கல்வியைப் பெற்றுக்கொடுக்க விரும்பும் பெற்றோருக்கு இதுவொரு நல்ல வாய்ப்பாகவே உள்ளது.
தனியார் பல்கலைக்கழகங்களில் கல்வியைத் தொடர்வதற்கு இடமளிப்பதன் காரணமாக இலவசக் கல்வி பாதிக்கப்படும் என்று கூறுவதற்கில்லை. பாடசாலைக் கல்வித்துறையில் தனியார் ஈடுபடுவதாலும் இலவசக் கல்விமுறை ஒழிந்துவிடப் போவதில்லை. ஒரு போட்டித் தன்மை உருவாகலாம். எந்தப் பாடசாலையில், எந்தப் பல்கலைக்கழகத்தில் பிள்ளையை சேர்ப்பதால் கூடுதல் பலன்கிட்டும் என்ற மனநிலை பெற்றோருக்கு ஏற்படலாம். இதனைக் கூட ஆரோக்கியமாகவே பார்க்க வேண்டும். தனியார் பல்கலைக்கழகங்களுக்கு அனுமதி வழங்கப்படும்போது அதன் கல்வித் தகுதியை நிர்ணயிக்கும் பொறுப்பு அரசுக்கு இருக்கின்றது. அந்த தகைமை நிர்ணயம் சட்ட ரீதியாக்கப்பட்டு அதனை தனியார்துறையினர் மீறாது செயற்பட சட்டம் வகுக்கப்பட வேண்டும். அவ்வாறான அடிப்படையில் தனியார் பல்கலைக்கழகங்களுக்கு அனுமதி வழங்குவது தப்பாக முடியாது.
இவற்றுக்கும் மேலாக நாம் இங்கு சுட்டிக்காட்ட விரும்புவது. கல்வித்துறையை தனியார் மயப்படுத்துவதற்கு முன்னர் அது குறித்து கல்விச் சமூகத்திற்கும் பல்கலைக்கழகச் சமூகத்திற்கும் ஒட்டுமொத்தமாக பிள்ளைகளின் எதிர்காலம் குறித்து சிந்திக்கும் பெற்றோர்களிடம் இது குறித்து பேசவேண்டும். அதன் பலாபலன்கள் பற்றி தெளிவுபடுத்தப்படவேண்டும். அதற்கான ஒத்துழைப்பைப் பெற்றுக்கொள்ள வேண்டும். இவற்றில் ஒன்றையுமே செய்யாமல் தன்னிச்சைப் போக்காக முடிவெடுத்து நாம் தீர்மானித்துவிட்டோம். அதனை நீங்கள் ஏற்றுத்தான் தீரவேண்டுமென்ற கொள்கையில் அரசு செயற்பட முனைந்ததால் ஏற்பட்ட எதிர்வினை எவ்வளவு பாரதூரமானதாக, மோசமானதாக அமைந்துவிட்டது என்பதை சிந்தித்துப் பார்க்கவேண்டும். பல்கலைக்கழக மாணவர்களின் சந்தேகம் ஆரம்பத்திலேயே களையப்பட்டிருந்தால் இன்று இத்தகைய அவலம் ஏற்பட்டிருக்க முடியாது. இந்த விடயத்தில் பல்கலைக்கழக மாணவர் மீது தொடர்ந்தும் அம்பெறிந்து கொண்டிராமல் சாதகமான போக்கைக் கடைப்பிடித்து அந்த மாணவர்களின் எதிர்காலத்தை ஒளிபெறச் செய்யும் வழிவகைகளில் அரசு கவனம் செலுத்த வேண்டுமென வலியுறுத்துகின்றோம்

-kana-
source;
http://www.thinakkural.com

Saturday, November 13, 2010

சுவை - நகை

படித்ததில் பிடித்தவை ..,


நன்றி .

"http://thoppithoppi.blogspot.com/2010/11/bio-data.html"
-கணா-