இந்த கணினி உலகில் பேஸ்புக் என்பது ஒரு அபரிமிதமான வளர்ச்சியை பெற்றுள்ளது. நம்மில் பலர் பேஸ்புக் உபயோகிக்கிறார்கள். நம் மெயிலுக்கு பேஸ்புக்கில் இருந்து ஒரு மெயில் வரும் இத்தனை நண்பர்கள் உங்களை நண்பர்கள் பட்டியலில் இருந்து நீக்கி உள்ளனர் என்று வரும் ஆனால் யார் யார் நம்மை நண்பர்கள் பட்டியலில் இருந்து நீக்கி உள்ளனர் என்பதை கண்டறியும் வசதி பேஸ்புக்கில் இல்லை. மற்றும் நாம் நண்பர்கள் கோரிக்கை அனுப்பி இன்னும் எத்தனை கோரிக்கைகள் ஏற்க்கபடாமல் உள்ளது என்றும் எப்படி கண்டறிவது என்று கீழே பார்ப்போம்.
இந்த வசதியை பெற நீகள் இந்த லிங்கில் http://www.unfriendfinder.fr/help/download சென்று அங்கு உள்ள Download என்ற பட்டனை அழுத்தி ஸ்கிரிப்ட் பைலை டௌன்லோட் செய்து கொள்ளுங்கள். உதவிக்கு கீழே உள்ள படத்தை பார்த்து கொள்ளுங்கள்
- இந்த ஸ்கிரிப்ட் பைலை டௌன்லோட் செய்தவுடன் உங்கள் பிரௌசரில் தானகவே இணைந்து கொள்ளும்.
- இந்த ஸ்கிரிப்ட் பைல் Google Chrome/ Opera / Mozillaa / Safari ஆகிய இயங்கு தளங்களில் இயங்குகிறது.
- நீங்கள் Mozilla firefox உபயோகித்து கொண்டிருந்தால் இந்த ஸ்கிரிப்ட் பைலை நிறுவ நீங்க உங்கள் பிரவுசரில் https://addons.mozilla.org/en-US/firefox/addon/748/ நிறுவியிருக்க வேண்டும்.
- இந்த ஸ்கிரிப்ட் பைலை நிறுவியவுடன் உங்கள் பேஸ்புக் அக்கௌண்டில் நுழைந்து கொள்ளுங்கள்.
- உங்களுக்கு புதியதாக ஒரு வசதி Unfriends என்ற லிங்க் இருக்கும்.
- இதில் கடந்த ஒரு வாரத்தில் உங்களை பட்டியலில் இருந்து நீக்கியவரின் விவரங்கள் தெரியும்.
- இதில் உள்ள இன்னுமொரு வசதி ஏற்க்கபடாத கோரிக்கைகள்.
- நாம் அனுப்பிய நட்பு கோரிக்கைகளை ஏற்காமல் இருப்பவர்களின் விவரங்களையும் இதில் பார்த்து கொள்ளலாம்.
- இதில் நாம் அனுப்பிய நட்பு கோரிக்கைகளை நாமே அகற்றி விடலாம்.
இனி உங்களிடமிருந்து யாரும் தப்பி விட முடியாது.
-நானும் உங்கள் நன்பேண்டா...../இல்லாட்டி நண்பேண்டி.... -
-கணா-
No comments:
Post a Comment