இன்னும் சில தினங்களில்,
இலங்கையில் கொழும்பில் முதலாவதாக 1942 இல் ஆரம்பிக்க்கப் பட்டு இப்போது பேராதனையில் இயங்கி வரும் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் 1950 யூலை முதலாம் திகதி ஆரம்பிக்கப் பட்ட ( தொழில்நுட்பக் கல்லூரியாக இருந்து பட்டம் வழங்கக் கூடிய நிறுவனமாக இலங்கைப் பல்கலைக் கழகத்துடன் இணைக்கப் பட்ட) பொறியியல் பீடம் தனது அறுபது ஆண்டு பூர்த்தியை கொண்டாடுகிறது.
அதற்காக பொறியியல் பீடத்தில் மிகவும் பிரம்மாண்டமான அளவில் கண்காட்சி ஒன்று வருகின்ற பதினேழாம் திகதி முதல் இருபத்திரண்டாம் திகதி வரை ஏற்பாடு செய்யப் பட்டு உள்ளது.
மாணவர்கள் பலரும் பல வகையான காட்சிப் பொருட்களை காட்சிப்படுத்தத் தயாராகி வருகின்றனர். (என்னைப் போல வெட்டியாகவும் சிலர் இருக்கத்தான் செய்கின்றனர்).
அதற்காக பலதரப்பட்டவகையில் கண்காட்சிக் கூடங்கள் அமைக்கப் பட்டு வருகின்றது.
ஆய்வுகூட காட்சிப்படுத்தல்கள் ;
மாணவர்களது புதிய ஆக்கங்கள் ;
தேடல்,ஆய்வு முடிவுகள் ;
மற்றும் தற்போதைய நடைமுறைக்கு ஏற்ப எழும் பொறியல் சார்ந்த பிரச்சனைகள் பலவற்றுக்கான தீர்வுகள் அதுபற்றிய மாதிரிகள் என்பனவும் காட்சிப் படுத்தலுக்காக தயார்ப் படுத்தப் பட்டு வருகின்றன.
அதைவிட பாடசாலை மாணவர்களது புத்தாக்க முயற்சிகளுக்கும் இடமளிக்கப் பட்டுள்ளது ;
இதற்கு மேலதிகமாக சில நிறுவனங்களும் காட்சிப் படுத்தல்களை மேற்கொள்ள இருக்கின்றன.
அத்துடன் மொரட்டுவை பல்கலைக் கழகத்தில் மிகவும் அண்மையில் கண்காட்சி ஒன்று நடை பெற்று முடிந்திருப்பதால் இது மேலும் சூடு பிடித்திருக்கிறது.
இன்னும் சூடு பிடிக்கும்ம்ம்ம்..
-அன்புடன்-
-கணா-